புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரஜினிக்கு வில்லனாகும் கமல்.. அடுத்த 1000 கோடி வசூலுக்கு லோகேஷ் போடும் புது கணக்கு!

Director Lokesh Kanagaraj: விக்ரம் படத்தை தொடர்ந்து, திரும்பும் இடமெல்லாம் லோகேஷ் கனகராஜின் பேச்சு தான் நிலவி வருகிறது. அவ்வாறு பிரம்மாண்ட படைப்பை மேற்கொண்டு, தொடர் வெற்றிகளை சந்தித்து வரும் இவர் அடுத்து ரஜினியை வைத்து உருவாக்கும் படம் குறித்த தகவலை இத்தொகுப்பு காணலாம்.

கமல் நடிப்பில் விக்ரம் படம் மாபெரும் வெற்றியை சந்தித்தது. மேலும் வசூல் ரீதியான வெற்றியை சந்தித்த இப்படத்தைக் கொண்டு லோகேஷ் இயக்கத்தில் ரஜினி படம் நடிக்க ஆசைப்பட்டதாக கூறப்பட்டது. அதை நிறைவேற்றும் விதமாய் லோகேஷ் தற்பொழுது இப்படத்திற்கான வேலையை தொடங்கியுள்ளார்.

Also Read:  சூர்யா, தனுஷ் மாதிரி கனவு கண்ட நடிகர்.. வயசு கோளாறில் நடிகையிடம் மயங்கி கிடக்கும் வாரிசு

மேலும் இப்படத்தில் லோகேஷ், ரஜினிக்கு வில்லனாக கமலை நடிக்க வைப்பதாக பேச்சும் எழுந்துள்ளது. தற்போது ப்ராஜெக்ட் கே படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கும் கமல், இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாய் நடித்தாலும் அதற்கு ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

மேலும் இப்படமே ரஜினியின் கடைசி படமாக இருக்கும் என்ற பேச்சும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நண்பனுக்காக இப்படத்தில் கமல் நெகட்டிவ் கதாபாத்திரம் ஏற்பார் எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே லோகேஷ் இயக்கம் என்றால் பல எதிர்பார்ப்புகள் இருக்கும் நிலையில், தற்பொழுது இப்படத்தில் ரஜினி, கமல் இருவரையும் இணைத்து படம் இயக்க முயற்சித்துள்ளார்.

Also Read:  72 வயதில் சும்மா கிடைக்குமா சூப்பர் ஸ்டார் பட்டம்?. ஏழு வருடத்தில் 70 படங்கள் நடித்த சாதனை

அடுத்த 1000 கோடி வசூலிக்க, புதிய யுத்தியை பயன்படுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி என்றால் இது இந்தியாவில் அதிக வசூல் செய்யப்பட்டு முதலிடத்தில் வந்து நிற்கும். மேலும் உலக அளவில் வசூலில் இதுதான் பெரிய படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு இது மட்டும் நடந்து விட்டால், தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி கண்ட படமாக இவை அமையும் எனவும் கூறப்படுகிறது. ஒரே படத்தில் ஒட்டுமொத்த பிரம்மாண்டத்தையும் படைக்கும் லோகேஷ் கனகராஜின் மதிப்பும் உயர்ந்துவிடும் என சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.

Also Read:  விஜய் கூட நடிக்கும் போதே அந்த படம் பிளாப் ஆயிடும்னு தெரியும்.. எரியுற நெருப்புல எண்ணெய் ஊற்றிய நடிகை

Trending News