திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆதி புருஷுக்கு போட்டியாக வரும் புராணம்.. பிரம்மாண்ட இயக்குனருக்காக புது அவதாரம் எடுக்கும் கமல்

Actor Kamal: கமல் இப்போது இளைஞர் போல் காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பம்பரமாக சுழன்று கொண்டிருக்கிறார். இந்த வயதிலும் இவருக்கு இருக்கும் எனர்ஜியை பார்த்தால் ஆச்சரியமாக தான் இருக்கிறது. ஒரு பக்கம் நடிப்பு, ஒரு பக்கம் தயாரிப்பு, ஒரு பக்கம் அரசியல் என பிசியாக இருக்கும் இவர் பிரம்மாண்ட இயக்குனருக்காக புது அவதாரம் ஒன்றையும் எடுக்க உள்ளார்.

அதாவது தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் மூலம் சர்வதேச அளவில் பலரையும் மிரட்டினார். அதிலும் சமீபத்தில் ஆர்ஆர்ஆர் படத்திற்கு கிடைத்த ஆஸ்கர் விருது இவரை இன்னும் உற்சாகப்படுத்தியுள்ளது.

Also read: நாயகன் பட கமலின் சாயல் யாருடையது தெரியுமா.? எம் எஸ் பாஸ்கர் சீக்ரெட், அரண்டு போன ஆண்டவர்

அந்த வகையில் இவர் தற்போது உலக நாயகனை வைத்து மகாபாரத இதிகாசத்தை உருவாக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கனவே இவர் கமலுடன் இணைய வேண்டும் என்பதை பலமுறை தெரிவித்து இருக்கிறார். அதன்படி தற்போது இவருடைய ஆசைக்கு கமலும் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான ஆதிபுருஷுக்கு போட்டியாக இந்த புராணக் கதை உருவாக இருக்கிறது.

அதிலும் உலகநாயகன் ஏற்க இருக்கும் கதாபாத்திரம் தான் உச்சகட்ட ஆர்வத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது மகாபாரத இதிகாசத்தின் முக்கிய கதாபாத்திரமான பீஷ்மர் கேரக்டரில் தான் கமல் நடிக்க உள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தை முடித்துள்ள இவர் அடுத்ததாக ப்ராஜெக்ட் கே, வினோத் கூட்டணியில் ஒரு படம், மணிரத்னத்துடன் ஒரு படம் என பிசியாக இருக்கிறார்.

Also read: உலகநாயகன் அறிமுகப்படுத்திய 6 தொழில்நுட்பங்கள்.. தேவர் மகன் படத்தில் இப்படி ஒரு டெக்னாலஜி இருந்ததா?

இருப்பினும் இந்த கதாபாத்திரம் அவருக்கு பிடித்த காரணத்தால் உடனே ராஜமௌவுலியிடம் கதையை தயார் செய்யுங்கள் என்று கூறிவிட்டாராம். அந்த வகையில் இப்படம் கமலுடைய 236 வது படமாக வெளிவர உள்ளது. மிகப்பெரும் நட்சத்திரபட்டாளங்கள் நடிக்க உள்ள இப்படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் கங்கையின் மைந்தனான பீஷ்மர் மகாபாரத போரில் கௌரவ படையின் உச்ச தளபதியாக இருந்தார். மேலும் மகாபாரதத்தின் முழு நிகழ்வுகளையும் பார்த்த ஒரே கதாபாத்திரமும் இதுதான். அப்படிப்பட்ட கேரக்டரில் கமல் நடிக்க இருப்பது உண்மையிலேயே அவரை உலகநாயகனாக உலகறிய செய்யும் ஒரு விஷயமாக இருக்கிறது.

Also read: விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் நிறுவனம்.. காற்றில் பறந்த வாக்குறுதி, வாய்க்கு பூட்டு போட்ட கமல், ரஜினி, விஜய், சூர்யா

Trending News