வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஈஸ்வரியை விட பல மடங்கு தில்லாலங்கடி வேலையை பார்க்கும் கமலா.. கோபி ராதிகாவிற்கு ஏற்படப் போகும் விரிசல்

Bhakkiyalakhsmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், உன்ன விட நான் எந்த விதத்திலும் குறைஞ்சவ இல்லை என்று ஈஸ்வரிக்கு பல மடங்கு டஃப் கொடுக்கும் ராதிகாவின் அம்மா. அதாவது ஈஸ்வரி வந்தது ராதிகாவுக்கும் அம்மாவிற்கும் பிடிக்கவில்லை. அதனால் ஈஸ்வரியே நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்ல வைக்கும் அளவிற்கு கமலா பல தில்லாலங்கடி வேலையை பார்க்கிறார்.

அதாவது ஈஸ்வரி ரூட்டிலேயே போயி கமலா பதிலடி கொடுக்கிறார். ஈஸ்வரியை கோபி நம்புகிறார், அதே மாதிரி கமலாவையும் ராதிகா நம்புகிறார். இதனால் ஈஸ்வரி என்ன பண்ணினாலும் கோபி சப்போர்ட் பண்ணி மாமியாரிடம் சண்டை போடுகிறார். அத்துடன் ராதிகா அவருடைய அம்மாவிற்கு சப்போர்ட் பண்ணி கோபியிடம் சண்டை போடுகிறார்.

ஈஸ்வரியை கெதி கலங்க வைக்கும் கமலா

ஆக மொத்தத்தில் கோபி மற்றும் ராதிகாவிற்கு சந்தோஷம் என்பது ஒரு கனவாகவே போய்விட்டது. கூடிய விரைவில் ஈஸ்வரி மற்றும் கமலா போடும் சண்டையில் கோபி ராதிகாவிற்கு இடையில் விரிசல் விழப்போகிறது. இதற்கு தான் ஆசைப்பட்டேன் என்பதற்கு ஏற்ப ஈஸ்வரி சந்தோஷப்பட போகிறாரா? அல்லது கமலா படுத்துற பாட்டை தாங்க முடியாமல் பாக்யாவிடம் தஞ்சமடைய போகிறாரா? என்பது கமலாவின் கையில் தான் இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து ஜெனி, எப்படியாவது நமக்கு நல்ல மருமகள் என்று அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால் அதற்காக அமிர்தாவிடம் பொறாமை பட்டு சண்டை போடும் அளவிற்கு தற்போது துணிந்து விட்டார். இதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று பாக்யா அமிர்தவிடம் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போக வேண்டும் என்று கூறுகிறார்.

அதே மாதிரி ஜெனியிடமும் போயி பாக்கியா நல்லபடியாக பேசி அவருடைய மனதை மாற்ற முயற்சி எடுக்கிறார். அத்துடன் பாக்யாவின் ஹோட்டல் பக்கத்தில் தற்போது ஒயின்ஷாப் வருவதால் அதனால் ஏதாவது பிரச்சனையாகி விடுமோ என்ற பயத்தில் பழனிச்சாமியை போய் பார்க்கப் போகிறார். வழக்கம் போல் பழனிச்சாமி இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கண்டுபிடித்து பாக்யாவுக்கு சந்தோஷத்தை கொடுக்கப் போகிறார்.

அத்துடன் பழனிச்சாமி மனதில் என்ன இருக்கிறது என்று அவருடைய அம்மாக்கு தெரிந்ததால் பாக்கியாவிடம் பேசலாமா என்று ஒரு முடிவில் இருக்கிறார். ஆனால் அதற்கு முன் பாக்யாவின் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார். அதைப்பற்றி தெரிந்து கொள்வதற்காக பாக்யாவின் வீட்டிற்கு போவதற்கு தயாராகி விட்டார்.

தற்போது ஈஸ்வரியும் இல்லாததால் மாமனார் மற்றும் எழில் பழனிச்சாமியின் அம்மாவிற்கு சாதகமாக பதிலை சொல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனாலும் பாக்கியா இதற்கு என்ன சொல்லப் போகிறார் என்பதுதான் பாக்கியா வீட்டிற்குள் அடுத்து நடக்கப் போகும் வாக்குவாதமாக இருக்கும். கடைசியில் பாக்கியா எனக்கு ஒரு நல்ல தோழர் தான் பழனிச்சாமி. அதைத் தவிர நான் அவரை வேறு எதை நினைத்து பார்க்கவில்லை.

என்னுடைய லட்சியம் என் சொந்த காலை நின்னு ஜெயித்து குடும்பத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்று சொல்லி பழனிச்சாமிக்கு டாட்டா காட்டி விடுவார்.

தனக்குத்தானே சூனியம் வைத்த கோபியின் கதை

Trending News