வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

அசோக் செல்வன் படத்தை அறிமுகப்படுத்திய உலகநாயகன்..

அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணிபோஜன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் ஓ மை கடவுளே.

இப்படத்தின் வெற்றிக்குப் பின்னர் பல்வேறு இயக்குநர்கள், அசோக் செல்வனிடம் கதைகள் கூறி வந்தனர். இதில் சில கதைகளை தேர்வு செய்து நடிக்கவுள்ள அசோக் செல்வன் முதலில் ஹாஸ்டல் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் முடிவாகியுள்ளது. இதனை கமல் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார். ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை விஷால் வெங்கட் இயக்கவுள்ளார். மேலும் ஏ.ஆர் எண்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

இதில் அபி ஹாசன், மணிகண்டன், ப்ரவீன் ராஜா, ரியா, ரித்விகா, அஞ்சு குரியன், நாசர், கே.எஸ்.ரவிகுமார், அனுபமா குமார், பானுப்ரியா, இளவரசு உள்ளிட்டோர் அசோக் செல்வனுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

ஒளிப்பதிவாளராக மெய்யேந்திரன், இசையமைப்பாளராக ராதன் மற்றும் எடிட்டராக பிரசன்னா ஜி.கே உள்ளிட்டோர் பணிபுரியவுள்ளனர்.

 

Trending News