வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கமலஹாசன் மிரட்டும் வில்லனாக நடித்த 4 படங்கள்.. கோலிவுட்டை வியப்பில் ஆழ்த்திய உலகநாயகன்

என்னதான் ஹீரோவாக சினிமாவை ஆட்டிப் படைத்தாலும் வில்லன் கதாபாத்திரத்திற்கு என்று ஒரு தனி கெத்து இருக்கத்தான் செய்கிறது. அந்த வகையில் கமலஹாசன் வில்லனாக நடித்த நான்கு படங்களின் வரிசையில் தற்போது பார்க்கலாம்.

குமாஸ்தாவின் மகள்: 1974-ஆம் ஆண்டு வந்த திரைப்படம் எஸ்பி நாகராஜன் இயக்கத்தில் சிவகுமார், ஆர்த்தி, கமலஹாசன் ,வி எஸ் ராகவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு குன்னக்குடி வைத்தியநாதன் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் கமலஹாசன் ஜமீன்தார் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

சிகப்பு ரோஜாக்கள்: பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி, கவுண்டமணி, வடிவுக்கரசி, பாக்கியராஜ் மற்றும் பலர் நடித்து 1978 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சிகப்பு ரோஜாக்கள். இப்படத்தின் தயாரிப்பாளர் பத்மாவதி, வசனம் பாக்கியராஜ். இப்படம் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி வெள்ளி விழா கொண்டாடப்பட்டது.

ஆளவந்தான்: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமலஹாசன், மனிஷா கொய்ராலா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் ஆளவந்தான். இப்படத்தின் இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன். இப்படத்தில் கமல்ஹாசன் நந்தகுமார் கதாபாத்திரத்தில் தனது சிறுவயதிலிருந்து சித்தி கொடுமையால் பெண்களை வெறுக்கிறார். இப்படத்தில் கமலஹாசன் இரு வேடத்தில் நடித்திருப்பார். ஒருவர் ஹீரோவாகவும், மற்றவர் வில்லனாகவும் நடித்திருப்பார்.

தசாவதாரம்: கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் பத்து மாறுபட்ட வேடங்களில் கமல் நடித்த திரைப்படம் தசாவதாரம். இப்படத்தில் அசின்,ஜெயப்பிரதா, மல்லிகா ஷெராவத், நெப்போலியன், கே ஆர் விஜயா, எம் எஸ் பாஸ்கர் போன்ற பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் இசை ஹிமேஷ் ரேஷ்மியா. இப்படத்தில் அசின் ஆண்டாள் மற்றும் கோதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கமலஹாசன்,கிறிஸ்டியன் பிளெட்சர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

dasavatharam-cinemapettai
dasavatharam-cinemapettai

Trending News