வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கமலால் அடுத்த லெவல் சென்ற படம்.. அக்கட தேசத்தை மிரள வைக்கும் ஆண்டவர்

Actor Kamal: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன் பின் படிப்படியாக தன் நடிப்பினை மேற்கொண்டு தமிழ் சினிமாவில் ஜாம்பவானாய், புகழின் உச்சியில் இருப்பவர் கமலஹாசன். இந்நிலையில் தற்போது இவர் மேற்கொண்ட செயல் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி கண்ட படம் தான் விக்ரம். இப்படத்தில் கமலின் நடிப்பு இளம் நடிகர்களுக்கு சவாலை அமைந்தது. அப்பட வெற்றிக்கு பிறகு தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் உலக நாயகன். மேலும் இவரின் தயாரிப்பின் கீழ் பல படங்கள் உருவாக உள்ளது.

Also Read: இதெல்லாம் சும்மா ட்ரெய்லர், மெயின் பிக்சரே இனிமே தான்.. களைக்கட்ட போகும் ஜெயிலர் ஆடியோ லான்ச்

இந்நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்தது கமலின் கவனம் ப்ராஜெக்ட் கே படத்தின் மேல் இருந்து வருகிறது. டோலிவுட் படமான ப்ராஜெக்ட் கே படத்தில் கமல் வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார். அதுவும் இளம் நடிகரான பிரபாஸிற்கு போட்டியாய் களம் இறங்கி உள்ளார்.

இந்நிலையில் இப்படம் பான் இந்தியா லெவலுக்கு ரீச் ஆக கமல் மட்டும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் கமலின் அனுபவத்திற்கும் முன் யாரும் ஈடாக முடியாது. அதை நிரூபிக்கும் விதமாய் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு இவர் போடும் முயற்சி பெரிதளவு பேசப்படுகிறது.

Also Read: நிறைவேறாமல் போன கமலின் ஆசை.. இன்றுவரை ஒரு ஜாம்பவானுடன் மட்டும் இணைய முடியாத துரதிர்ஷ்டம்

சாதாரண படமாய் இருந்த இப்படம் கமலின் வருகையால் இன்டர்நேஷனல் லெவலுக்கு பெரிய ரீச் கொடுத்து வருகிறது. மேலும் படத்தில் பல முக்கிய பிரபலங்கள் நடிக்கிறார்கள். அதிலும் குறிப்பாக அமிதாபச்சன் இப்பட நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு முன்பாகவே கமல் அங்கே என்ட்ரி போட்டு, படம் குறித்து ஓப்பன் டாக் கொடுத்துள்ளார். இதைப் பார்க்கையில், இப்படத்தில் இவர் மேற்கொள்ளும் கதாபாத்திரத்தை தாண்டியும் இவர் கொண்டுள்ள ஆர்வம் பெரிதாய் பார்க்கப்படுகிறது. இத்தகைய பங்களிப்பை கொடுத்து டோலிவுட்டையே மிரளவைத்து வருகிறார் ஆண்டவர்.

Also Read: மூன்றே நாள் படப்பிடிப்பு, சமந்தாவை மாற்றி ஐயர் நடிகையை சுத்தலில் விட்ட சிம்பு.. இப்ப புலம்பி என்னத்துக்கு

Trending News