ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

கமல் நடித்த 7 சிறந்த நகைச்சுவை படங்கள்.. பார்த்து வயிறு வலிக்க சிரிங்க

நடிப்பு, நடனம், தயாரிப்பு, இயக்கம், திரைக்கதை என்று தமிழ் சினிமாவில் சகலகலா வல்லவன் என்ற பெயரைப் பெற்றவர் கமலஹாசன். இவர் நடிப்பில், காமெடி கதாபாத்திரத்தில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த படங்கள் வரிசையாக பார்க்கலாம். கமல் நடிப்பில் வெளிவந்த அனைத்து படங்களிலும் காமெடி இன்றளவும் ரசிக்கக் கூடியதாக இருக்கும்.

1. மைக்கேல் மதனகாமராஜன்

michael madana kamarajan
michael madana kamarajan

1990 ஆம் ஆண்டு கமலஹாசன், கிரேஸி மோகன் வசனத்தில் மைக்கேல் மதனகாமராஜன் பட்டையைக் கிளப்பியது என்றே கூறலாம். இந்த படத்தில் பெரும் பட்டாளமே நடித்திருக்கும், முக்கிய பிரபலங்கள் என்று பார்த்தால் ஊர்வசி, ருபினி, மனோரமா, நாசர், வெண்ணிறாடை மூர்த்தி, நாகேஷ் என்று பலர் கமலஹாசனுடன் எதார்த்தமான நடிப்பிற்கு இடு கொடுதுருபார்கள். இந்த படம் பல விருதுகளை தட்டி சென்றது, 175 நாட்கள் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்துள்ளது.

2. மகராசன்

maharasan
maharasan

1993-ல் மகாராசன் என்ற படம் ரங்கராஜன் இயக்கத்தில் வெளிவந்தது. இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக பானுப்ரியா நடித்திருப்பார், இளையராஜா இசை அமைத்திருப்பார். இந்த படம் நகைச்சுவையால் மட்டுமே வெற்றி பெற்றது, கவுண்டமணி,செந்தில் காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

3. சதிலீலாவதி

sathi leelavathi
sathi leelavathi

1995 ஆம் ஆண்டு வெளிவந்த சதிலீலாவதி கமலஹாசனின் சினிமா வாழ்க்கையை புரட்டிப் போட்டது என்று கூறலாம். பாலுமகேந்திரா இயக்கத்தில், கிரேசி மோகன் வசனத்தில் வெளிவந்த இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருப்பார், அப்போதே கோடிகளில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் 8 கோடி வரை வசூல் செய்துள்ளதாம். கமலஹாசனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் ரமேஷ் அரவிந்த், கல்பனா, கோவை சரளா ஆகியவர்கள் நேர்த்தியாக நடித்திருப்பார்கள்.

4. அவ்வை சண்முகி

avvai shanmugi
avvai shanmugi

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமலஹாசன், மீனா போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்தது அவ்வை சண்முகி. பெண் வேடத்தில் இன்றளவும் தமிழ் சினிமாவிற்கு உதாரணமான படம் இந்த அவ்வை சண்முகி. இந்த படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர் போன்றவர்கள் கமலஹாசனுக்கு நிகராக நடித்திருப்பார்கள்.

5. காதலா காதலா

kaathala kaathala
kaathala kaathala

பிரபுதேவா, கமலஹாசன் இணைந்து நடித்த படம் காதலா காதலா. கமல்ஹாசனுக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றியை பார்த்து ஹிந்தியில் ஹவுஸ்ஃபுல் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ், கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பில் வெளியிட்டார்.

6. பஞ்சதந்திரம்

panchathandiram-cinemapettai
panchathandiram-cinemapettai

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், தேனப்பன் தயாரிப்பில் வெளிவந்தது பஞ்சதந்திரம். கமல்ஹாசனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருப்பார், ஐந்து நண்பர்கள் செய்யும் அட்டகாசத்தை மிக தத்ரூபமாக கே.எஸ்.ரவிக்குமார் வெளிக்கொண்டு வந்துருப்பார். இந்த படத்தில் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், யோகி சேது, ஸ்ரீமன், ரம்யா கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் நடித்திருப்பார்கள்.

7. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்

vasool raja mbbs
vasool raja mbbs

சரண் இயக்கத்தில் கமலஹாசன், சினேகா போன்ற பிரபலங்களின் நடிப்பில் வெளிவந்தது வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் கமலஹாசன்  மனிதநேயமுள்ள டாக்டராக எப்படி மறுக்கிறார் என்பதை காமெடியில் கலக்கி இருப்பார்கள். இந்த படத்தின் வெற்றியை வைத்து ஹிந்தியில் முன்னாபாய் எம்.பி.பி.எஸ் என்று ரீமேக் செய்யப்பட்டது.

கமலின் அனைத்து படங்களுக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் எழுத்தாளராக, ஒளிப்பதிவாளராக கிரேசி மோகன் இடம்பெற்றுள்ளது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. கமலஹாசனின் சினிமா வாழ்க்கையில் வெற்றிக்கு பின்னர் நிறைய பிரபலங்கள் உள்ளனர். இதில் முக்கியமானவர் கிரேசி மோகன் என்பது இந்த வரிசையில் தெரிகிறது.

Trending News