கமல்ஹாசனை தமிழ் சினிமாவின் பொக்கிஷம் என பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலமுறை கூறியுள்ளனர். அதற்கு காரணம் கமல்ஹாசனின் நடிப்பு அவர் மேல் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கை.
சினிமாவைப் பொருத்தவரை பல நடிகர்கள் ஒரு சில படங்களில் படப்பிடிப்பு நடந்து பின்பு ஏதோ ஒரு காரணத்தினால் கைவிடப்பட்டுள்ளன. அந்த மாதிரி கமல்ஹாசன் நடித்த பின்பு கைவிடப்பட்ட படங்களை பார்ப்போம்.
அதிவீரபாண்டியன்: கங்கை அமரன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் அதிவீரபாண்டியன். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் “சாந்து பொட்டு சந்தன பொட்டு” என்ற பாடல் இந்த படத்திற்காகத்தான் முதலில் எழுதப்பட்டது. ஆனால் இளையராஜாவிற்கும் கங்கை அமரனுக்கு ஒருசில ஈகோ பிரச்சினையால் இப்படம் கைவிடப்பட்டது.
டாப்பு டக்கரு. இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் டாப்பு டக்கரு. இப்படத்தில் ராதாவை நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி பின்பு படப்பிடிப்பு நடத்தப்பட்டது. படத்தின் பாதி காட்சிகள் நிறைவடைந்த நிலையில் சிவப்பு ரோஜா படத்தை போலவே கதையின் சாயல் உள்ளதாக படத்தை கைவிட்டனர்.
கிருஷ்ண லீலா. கமல்ஹாசன் மற்றும் கௌதமி நடிப்பில் உருவான திரைப்படம் தான் கிருஷ்ணலீலா. இப்படம் முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. சங்கீதசீனிவாசன் இப்படத்தை இயக்கியிருந்தார். கணவனாக கிருஷ்ணாவும் மனைவியாக லீலாவும் என கதாபாத்திரத்தை வடிவமைத்து கிருஷ்ணலீலா என படத்திற்கு பெயர் வைத்தனர். பின்பு கௌதமி கதாபாத்திரத்திற்கு பதிலாக ரோகினி, ராகினி ஆகியோர் நடிக்க வைக்க திட்டமிட்டு படம் எடுக்க முடியாமல் டிராப் ஆனது.
மருதநாயகம். கமல்ஹாசன் நடிப்பில் இந்தியாவே எதிர்பார்த்திருந்த திரைப்படம் தான் மருதநாயகம். இப்படத்தின் பூஜைக்காக எலிசபெத் ராணி இந்தியாவிற்கு வந்து படத்திற்கு பூஜை போட்டார். படத்தின் சில காட்சிகள் வெளியானதிலிருந்து இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இன்று வரை ரசிகர்கள் மனதில் உள்ளது. ஆனால் படத்தின் பட்ஜெட் காரணமாக டிராப் செய்யப்பட்டது.
குமார சம்பவம். குமாரசம்பவம் படத்தை தமிழ் மற்றும் ஹிந்தியில் எடுக்க திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். பின்பு ஏதோ ஒரு சில காரணங்களால் இப்படம் டிராப் செய்யப்பட்டது.
மர்மயோகி. கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் மர்மயோகி. இப்படத்தில் ஸ்ரேயாசரண், திரிஷா மோகன்லால் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்தனர். இப்படத்தை தயாரித்த அதே நிறுவனம்தான் குசேலன் படத்தையும் தயாரித்துயிருந்தனர். அப்போது குசேலன் படம் படுதோல்வியடைந்தது. அதனால் இப்படத்திற்கு தயாரிப்பு தரப்பிலிருந்து எந்த ஒரு செலவும் செய்ய முடியாமல் தவித்தனர். இப்படம் டிராப் ஆனது.
தலைவன் இருக்கின்றான். கமல்ஹாசன் தலைவன் இருக்கிறான் என்ற தலைப்பில் அரசியல் மையமாக வைத்து எடுத்தனர் இப்படம் ஆரம்பிக்கும்போது இதில் அரசியல் கலந்த ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் இருக்கும் என படக்குழுவினர் கூறினர். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசனுக்கு ஜோடியாக அனுஷ்காவும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அரசியல் கதையை மையமாகக் கொண்டதால் எந்த தயாரிப்பாளரும் முன்வராமல் இப்படம் டிராப் ஆனது.
19 ஸ்டெப்ஸ். கமல்ஹாசனை வைத்து 19 ஸ்டெப்ஸ் என்ற படத்தை பரத்பாலா இயக்கியிருந்தார். கேரளாவில் உள்ள கரிய மைய வைத்து ஹிஸ்டாரிக்கல் படமாக எடுக்க இருந்தார். 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்து பின்பு ஒரு சில காரணங்களால் படம் டிராப் ஆனது.
சபாஷ் நாயுடு. சபாஷ் நாயுடு படத்தை டிஜே ராஜ்குமார் முதலில் இயக்கயிருந்தார். பின்பு ஒரு சில காரணங்களால் கமல்ஹாசன் படத்தை இயக்குவதாக தகவல்கள் வெளியானது. இப்படத்தில் கமல்ஹாசன் மற்றும் சுருதிஹாசன் இருவரும் இணைந்து நடித்தனர். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. பின்பு ஒரு சில காரணங்களால் இப்படம் டிராப் ஆனது.
கபர்தார். கமல்ஹாசன் மற்றும் அமிதாப்பச்சன் நடிப்பில் உருவான திரைப்படம் தான் கபர்தார். தாட்டி நெட் டி ராமாராவ் என்ற தெலுங்கு இயக்குனர் இப்படத்தை இயக்கயிருந்தார்.
இப்படத்தில் டாக்டர், பேஷண்ட் காமெடி கதையை வைத்து இருவரையும் இயக்கயிருந்தனர். பின்பு ஒரு சில காரணங்களால் இப்படம் டிராப் ஆனது.
மேற்கண்ட படங்களைத் தவிர அமீர் மற்றும் செல்வராகவனுடன் ஒரு சில படங்கள் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகயிருந்தது பின்பு ஒரு சில காரணங்களால் டிராப் ஆனது.