தம்பி விஜய்க்காக விட்டுக் கொடுத்த கமல்.. ஜனநாயகன் கதை இதுவா.? முழு பின்னணி

Vijay-Jana Nayagan: விஜய்யின் கடைசி படம் என்பதாலேயே ஜனநாயகன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்கேற்றார் போல் ஹெச் வினோத் சீன் பை சீன் ஆக செதுக்கி வருகிறாராம்.

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான நான் ஆணையிட்டால் போஸ்டர் வேற லெவலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுவே இப்படம் முழு அரசியல் சார்ந்த கதை என்பதை சொல்லாமல் சொல்லியது.

இந்நிலையில் ஜனநாயகன் ஸ்டோரி கமலின் தலைவன் இருக்கிறான் கதை தான் என பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

அதாவது ஹெச் வினோத் கமலை இயக்கும் அறிவிப்பு வந்தது அனைவருக்கும் தெரியும். கிட்டத்தட்ட ஒரு வருடம் இதற்கான வேலைகள் நடந்த நிலையில் தற்போது படம் தள்ளிப் போயிருக்கிறது.

ஜனநாயகன் கதை இதுவா.?

அந்த கதையை தான் வினோத் ஜனநாயகனாக எடுப்பதாக கூறப்படுகிறது. கமலுக்கு இவர் கதை சொல்லும் போது தன்னிடம் இருந்த தலைவன் இருக்கிறான் கதையை பண்ணலாம் என அவர் சொல்லியிருக்கிறார்.

அதற்கான வேலைகளும் தீயாக நடந்தது. அதன் பிறகு என்ன நடந்ததோ கமல் வினோத்திடம் நீங்கள் வேறுபடம் பண்ணுங்கள். நாம் நிச்சயம் விரைவில் இணைவோம் என்று சொல்லி இருக்கிறார்.

அதோடு நில்லாமல் தலைவன் இருக்கிறான் கதையை தம்பி விஜய் பண்ணட்டும் என சொன்னதும் அவர் தான். இதை அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்யாறு பாலு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தலைவன் இருக்கிறான் படத்தின் ஒன் லைனை வைத்து ஜனநாயகன் விஜய்க்கு ஏற்றார் போல் உருவாகிறது. நிச்சயம் படம் வெளி வந்தால் அரசியல் வட்டாரத்தில் கதறல் அதிகமாக இருக்கும்.

அந்த அளவுக்கு அரசியல் பஞ்ச் வசனங்கள் முதற்கொண்டு தீயாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த வகையில் அடுத்த வருட தொடக்கமே பெரும் சம்பவமாகத் தான் இருக்கப் போகிறது.

Leave a Comment