கமல்ஹாசன் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் தக்லைஃப் படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் இணைந்து திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஜெயம்ரவி, சிம்பு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.
கமல்-மணித்னம் கூட்டணில் 37 வருடங்களுக்குப் பின் இணைந்துள்ளதால் அகில இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதைத்தொடர்ந்து, கமலின் 235வது படத்தை பா. ரஞ்சித்தும், 236 வது படத்தை நெல்சனும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படங்கள் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், கமல் 237 படத்தை, பிரபல ஸ்டண்ட் கலைஞர்கள் அன்பறிவ் ( அன்புமணி, அறிவுமணி ) ஆகிய இருவரும் இணைந்து இயக்கவுள்ளனர். கடந்த ஆண்டே இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகி கோலிவுட்டில் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியது.
கமல் 237 படத்துக்கு இசையமைக்கும் பிரபல இசையமைப்பாளர்
இந்த நிலையில் இப்படம் பற்றி புதிய அப்டேட் வெளியாகிறது. அதன்படி, கமல் 237 பட ஷூட்டிங் வரும் ஜனவரியில் தொடங்கும் எனவும், ஆக்சன் படமாக உருவாகும் இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பதாக தகவல் வெளியாகிறது.
தமிழ் சினிமாவின் திறமையான இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர், சிம்பு, ரஜினி, விஜய் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியிருந்தாலும், சமீபத்தில் கமல் தயாரிப்பில், சிவகார்த்திகேயன்-சாய்பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான அமரன் படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் பிஜிஎம், பாடல்கள் பெரியளவில் பேசப்பட்டது. இப்படமும் ரூ.300 கோடி வசூல் குவித்தது.
இந்த நிலையில், கமலின் 237 வது படத்துக்கும் ஜிவி.பிரகாஷ் இசையமைக்க உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. இப்படமும் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அனிருத் ஏன் இல்லை?
கமல்-லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் படத்துக்கு பிஜிஎம், பாடல்களை வேற லெவலில் இசையமைத்த அனிருத் இப்படத்தில் ஏன் இடம்பெறவில்லை என ரசிக்ர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அவருக்கு வேறு படங்களில் அதிக வேலை இருப்பதால்தான் அவர் கமிட்டாகி இருக்கா மாட்டார். அதேசமயம், அமரன் பட ரீச்சினால் இப்படத்துக்கும் ஜிவி பிரகாஷையே கமல் தேர்ந்தெடுத்ததற்கு காரணம் இருக்கும் என கூறுகின்றனர்.