இன்றைய தேதியில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களின் பற்றாக்குறை அதிகமாக இருக்கிறது. காமெடி நடிகர்கள் என்ற பெயரில் நிறைய பேர் உலா வந்தாலும் உண்மையாலுமே இவர்களது காமெடி காட்சிகளுக்கு ரசிகர்கள் சிரிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.
இப்போதைக்கு தமிழ் சினிமா யோகி பாபுவை மட்டும் வைத்து வண்டியை ஓட்டிக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு சில வருடங்களுக்கு முன்பு காமெடி நடிகர்கள் என குறிப்பிட்ட சிலர் மட்டுமே இருந்தனர்.
அந்தவகையில் வைகைப்புயல் வடிவேலுக்கு ஒரு பிரம்மாண்ட வரவேற்பு கிடைத்தது. இன்றும் காமெடி தொலைக்காட்சிகளில் வடிவேலு காமெடி தான் பிரதானமாக ஒளிபரப்பப்படுகிறது. அதேபோல் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கடவுளே அவர்தான்.
இப்படிப்பட்ட வடிவேலு படத்தை பார்த்துவிட்டு கமல் விழுந்து விழுந்து சிரித்ததாகவும், இப்படியெல்லாம் காமெடி செய்ய முடியுமா என மிரண்டு போய் வடிவேலு பற்றி நாசரிடம் கூறியுள்ளார் கமல்.
வடிவேலுவின் இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தில் புலிகேசி மன்னர் ஆக நடித்த வடிவேலுவின் ஒவ்வொரு காட்சியும் பார்த்து ரசித்து ரசித்து சிரித்தாராம் கமல். அதிலும் போருக்கு முன்னர் செல்லும் காட்சி கமல்ஹாசனின் ஃபேவரிட் காட்சியாகவும் அமைந்ததாம்.
வடிவேலுவின் சினிமா வாழ்க்கையில் கமலஹாசனுக்கு மிகப் பெரிய பங்குண்டு என்பதும் குறிப்பிட வேண்டியது. கமல்ஹாசனுக்கு பிடித்த ஒரு சில நடிகர்களில் வடிவேலுவுக்கு முக்கியமான இடம் இருப்பதாக நாசர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.