வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

திறமை இருந்தும் 35 வருடம் போராடி பெற்ற அங்கீகாரம்.. கமலை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நடிகர்

Actor Kamal: என்னதான் திறமை இருந்தாலும் சினிமாவில் அவ்வளவு சுலபமாக ஜெயித்து விட முடியாது. இன்று முன்னணியில் இருக்கும் பழைய ஹீரோக்கள் ஆரம்பகால கட்டத்தில் பல தடைகளை கடந்து தான் வந்திருக்கிறார்கள்.

அப்படித்தான் பிரபல நடிகர் ஒருவரும் கிட்டத்தட்ட 35 வருடங்கள் சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி இருக்கிறார். காமெடியன், குணச்சித்திரம், வில்லன், டப்பிங் ஆர்டிஸ்ட் என இவருக்கு பல முகங்கள் உண்டு. ஆனாலும் பெரிய அளவில் கவனம் பெறாத இவர் இப்போது தவிர்க்க முடியாத ஒரு நடிகராக உருவெடுத்து இருக்கிறார்.

அவர்தான் எம் எஸ் பாஸ்கர். விசுவின் திருமதி ஒரு வெகுமதி படத்தில் அறிமுகமான இவர் பல படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் தோன்றி இருக்கிறார். ஆனால் இவருக்கு மிகப்பெரும் அடையாளமாக இருந்தது சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா தொடர் தான்.

Also read: ஆண்டவரை அஸ்தமனம் ஆக்கிய பிக் பாஸ்.. சிஷ்யன் வாங்கி கொடுத்த பெயரை மொத்தமாய் காலி செய்த கமல்

அதில் இவர் நடித்த பட்டாபி என்ற கதாபாத்திரம் இப்பவும் ரொம்ப ஃபேமஸ். ஒரு கையை காதில் வைத்தபடி அவர் பேசும் அந்த மேனரிசம் வேற லெவலில் இருக்கும். இதை பார்த்து கமல் விழுந்து விழுந்து சிரித்ததாக ஒரு முறை வெளிப்படையாக கூறியிருந்தார்.

அப்படிப்பட்ட நல்ல கலைஞனான இவர் மொழி, அஞ்சாதே, பயணம், தெய்வத்திருமகள் என பல படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த பார்க்கிங் படமும் இவருக்கு பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது.

இப்படியாக லேட்டானாலும் இவருக்கு சரியான ஒரு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. ஆனால் இவருடைய மகன் ஆதித்யா பாஸ்கர் முதல் படத்திலேயே பெரும் கவனத்தை பெற்றார். அதன்படி 96 படத்தில் சிறு வயது விஜய் சேதுபதி ஆக இவர் நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Also read: ஆண்டவருக்கே அல்வா கொடுக்க நினைத்த சிம்பு.. விட்டு பிடிக்கும் உலக நாயகன்

Trending News