வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

தமிழ் சினிமாவில் முதல் முறையாக ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம்.. கமல் செய்த வசூல் சாதனை

உலகநாயகன் கமலஹாசன் சிறு வயது முதலே சினிமாவில் நடித்து வருகிறார். அவருடைய அனுபவம், அர்ப்பணிப்பு எல்லாமே சினிமாவில் பெரியது தான். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான தொழில்நுட்பத்தை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்ததில் பங்கு கமலுக்கு உள்ளது.

மேலும் இப்போது 500 கோடி, 600 கோடி என பிரம்மாண்ட பட்ஜெட்டில் படங்கள் எடுப்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. ஆனால் தமிழ் சினிமாவில் முதல் முதலாக ஒரு கோடியை தாண்டி எடுக்கப்பட்ட படம் கமலின் படம் தான். அந்தப் படம் மிகப்பெரிய வசூல் சாதனையையும் படைத்திருந்தது.

Also Read : கமலை விட 99% வெற்றி படங்களை கொடுத்த ரஜினி.. இந்த ஒரு விஷயத்தால் சரிந்த மார்க்கெட்

அதாவது 1986 ஆம் ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் கமல், சத்யராஜ் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விக்ரம். இந்த படம் 1.5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. விக்ரம் படம் தான் முதல் முறை அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருந்தது. மேலும் இப்படம் 8 கோடி வசூல் செய்திருந்தது.

இவ்வாறு கமல் அதிக பட்ஜெட்டில் எடுத்தாலும் பல மடங்கு லாபத்தை அள்ளி உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் பல வருடங்களுக்குப் பிறகு லோகேஷ் இயக்கத்தில் விக்ரம் என்ற டைட்டிலுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கமலின் திரை வாழ்க்கைலையே அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

Also Read : 40 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கும் 6 சப்போர்ட்டிங் ஆக்டர்ஸ்.. பல தலைமுறை பார்த்த கமலின் உயிர் நண்பன்

மேலும் விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது. இவ்வாறு கமலுக்கு விக்ரம் என்ற இந்த இரண்டு படங்களுமே மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது மட்டுமின்றி சாதனை புரிந்தது. இப்போது கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். லைக்கா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது.

மேலும் 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தியன் 2 ரிலீஸ் ஆக உள்ளது. இதைத்தொடர்ந்து மணிரத்னம், எச் வினோத் போன்ற இயக்குனர்கள் கமலின் லயன் அப்பில் உள்ளனர். அதுமட்டுமின்றி டாப் இயக்குனர்களை வைத்து கமல் நிறைய படங்களை தயாரித்து வருகிறார்.

Also Read : முழு அனுபவத்தால் ரஜினி ரிஜெக்ட் செய்த 4 இயக்குனர்கள்.. கமலுக்கு வாரி இறைச்ச சூப்பர் ஹிட் படம்

Trending News