Kamal Speech: ரஜினி அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்த நிலையில் திடீர் சர்ப்ரைஸ் ஆக கமல் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கினார். இன்று ஏழாவது நாளில் அக்கட்சி அடியெடுத்து வைக்கிறது. அதைத் தொடர்ந்து கொடியேற்றிய கமல் செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.
அப்போது அவர் பார்ட் டைம் அரசியல்வாதி என்ற விமர்சனத்திற்கு பதில் அளித்தார். என்னை முழு நேர அரசியல்வாதி கிடையாது என்று சொல்லும் நீங்கள் முழு நேர குடிமகனா? இங்கு யாரும் முழு நேர அப்பனும் கிடையாது. மனைவியும் கிடையாது. பிள்ளையும் கிடையாது.
நான் கோவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். ஏனென்றால் 90 ஆயிரம் பேர் வாக்களிக்கவில்லை. ஓட்டு போடுவது அனைவரின் கடமை. ஆனால் 40% மக்கள் அந்த கடமையை செய்யாமல் வீட்டிலேயே உட்கார்ந்து கொள்கிறீர்கள் என காட்டமாக பதிலடி கொடுத்திருந்தார்.
Also read: அந்தர்பல்டி அடித்த இந்தியன் 2 படம்.. கமல் இல்லாமல் நடக்கும் சூட்டிங்
மேலும் விஜய்யின் அரசியல் கூட்டணி குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கமல், விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று முதலில் அழைத்தது நான்தான். அவர் சினிமாவை விட்டு முழு நேர அரசியல் பணி செய்யப் போகிறார். அது அவருடைய பாணி. என்னுடைய பாணி வேறு என்று தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விரைவில் நல்ல செய்தி சொல்கிறேன் என்றும் கூறியுள்ளார். நிச்சயம் திமுகவுடன் இந்த கூட்டணி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி கமல் பத்திரிக்கையாளர்களின் சரமாரி கேள்விகளுக்கு அனல் பறக்கும் பதிலடியை கொடுத்திருப்பது வைரலாகி வருகிறது.