சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கமல் உங்களுக்கு வயசு ஆகல.. பழைய விக்ரம் படம் மாறியே புது எனர்ஜியோடு அசத்தும் ஆண்டவர்

உலகநாயகன் நடிப்பில் மிக பிரமாண்டமாக விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகிறது. விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சிறப்பு தோற்றத்தில் சூர்யா என பலர் நடிப்பில் இப்படம் வெளியாகிறது. மிகுந்த எதிர்பார்ப்புகளில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி எனஅனைத்து மொழிகளில் வெளியாகி உள்ளது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமலஹாசன் நடித்து வெளிவருவதால் படத்திற்கான பிரமோஷன் வேலைகளை மும்முரமாக செய்து வருகிறார். அதன் ஒரு படியாக உலகின் மிக உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபா வில் விக்ரம் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

கமலஹாசன் இரசிகர்கள் துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா என உலகம் முழுவதும் பரந்து உள்ளனர். அவர்களுக்காக படங்களை கமலஹாசன் மும்முரமாக பிரமோஷன் வேலைகளை செய்து வருகிறார். சமீபத்தில் மலேசியா சென்று படத்திற்கான பிரமோஷன் வேலை செய்து வந்தார். அதன்பின்பு தற்போது துபாயில் பிரமோஷன் வேலைகளை செய்து வருகிறார்.

1986 இல் வெளியான விக்ரம் படத்திற்கு இணையாக தற்போது வெளியாகும் விக்ரம் படத்தில் கமலஹாசன் அதே எனர்ஜியுடன் அதே சுறுசுறுப்புடன் நடித்துள்ளார். அவர் எழுதி நடித்துள்ள தரலோக்கல் பாடலான ,”பத்தல பத்தல,” என்ற பாடல் உலகம் முழுவதும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு பெற்று வருகிறது.

சிறிது காலம் கமர்ஷியல் சினிமாவில் விலகியிருந்த கமலஹாசன் தற்போது விக்ரம் படம் மூலம் அதே பார்மட்டில் திரும்பியுள்ளார் மற்றும் அதே எனர்ஜியுடன் உலகம் முழுவதும் சுற்றி வருகிறார்.தமிழ் முன்னணி நட்சத்திர நடிகரின் படங்கள் வெளிநாடுகளில் வெளியாகும்போது பெரிய ஓப்பனிங்கை பெரும், படம் நன்றாக அமைந்தால் வசூலையும் வாரி குவிக்கும்.

கமலஹாசன் ஒவ்வொரு ப்ரோமோவையும் பார்த்து பார்த்து ரசிகர்களுக்காக கடுமையாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மலேசியாவில் நடந்து முடிந்த ப்ரோமோ, பிரமோஷனில் கால தாமதமாக வந்ததால் அவரது ரசிகர்களிடையே சிறு அதிருப்தியும் சலசலக்கும் நிலவியது. எனினும் தற்போது வெளியாகியிருக்கும் துபாய் புர்ஜ் கலிஃபா விக்ரம் பட டிரைலர் உலக ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Trending News