வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

டாப் இயக்குனருடன் பல கோடி லாபத்தை பார்க்க கமல் தீட்டிய பிளான்.. வேறு வழியில்லாமல் ஓகே சொன்ன ரஜினி!

ரஜினி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த அண்ணாத்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் இவருடைய அடுத்த படமான ஜெயிலர் மற்றும் லால் சலாம் மிகப்பிரமாண்டமாக உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதே மாதிரி நெல்சன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த பீஸ்ட் திரைப்படமும் எதிர்பார்த்த அளவில் கை கொடுக்கவில்லை. இதனால் ரஜினி மற்றும் நெல்சன் இவர்கள் இருவருமே இப்படத்தை எப்படியாவது வெற்றி படமாக ஆக்க வேண்டும் என்று ஜெயிலர் படத்தில் மும்பரமாக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்கள்.

ரஜினி இந்த இரண்டு படங்களுக்குப் பிறகு நடிக்க இருக்கும் படமானது மிக வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக தற்போது வெற்றி இயக்குனராக இருக்கக்கூடிய லோகேஷ் இயக்கத்தில் ரஜினி கமிட் ஆகியுள்ளார். இதனை தெரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் இப்படத்தை நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு தயாரிக்க அனைவரும் முன் வருகின்றனர்.

Also read: மருதநாயகம் போல் கிடப்பில் போடப்பட்ட படம்.. மீண்டும் கதையை சொல்ல சொன்ன சூப்பர் ஸ்டார்

அதற்காக ஒவ்வொரு தயாரிப்பாளர்களும் ரஜினியிடம் நேரடியாக பேசினால் காரியத்தை சாதிக்கலாம் என்று அவரை தனியாக சந்தித்தும் போனில் தொடர்பு கொண்டும் வருகிறார்கள். அத்துடன் இப்படத்திற்கு எவ்வளவு கோடி செலவானாலும் பரவாயில்லை நாங்கள் தயாரிக்கிறோம் என்று பணத்தை வாரி இறைக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் கமல் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அனைவரின் படத்தையும் தயாரிக்க இருக்கிறார்.

இப்படி இருக்கையில் கமல், ரஜினி படத்தை மட்டும் விட்டு வைப்பாரா என. கமலுக்கு இப்படத்தை தயாரிப்பதற்கு ரொம்பவே ஆசையாக இருப்பதால் நான் தயாரிக்கிறேன் என்று நேரடியாகவே ரஜினியிடம் கேட்டிருக்கிறார். கமல் வெளிப்படையாகவே கேட்ட பிறகு ரஜினியால் இதற்கு மறுப்பு தெரிவிக்க முடியாது. அத்துடன் இப்படத்தை கமல் தயாரித்தால் எனக்கும் நன்றாக இருக்கும் என்று லோகேஷும் கூறி இருக்கிறார்.

Also read: நம்பி இருந்த இயக்குனருக்கு டாட்டா காட்டிய கமல்.. வசூலை வாரி குவிக்கும் இயக்குனருடன் கூட்டணி

அதனால் கண்டிப்பாக இந்த பிரம்மாண்ட படத்தை  விடமாட்டார் கமல். ஏனென்றால் ஒரு பக்கம் லோகேஷின் கதை மற்றொரு பக்கம் ரஜினியின் நடிப்பு. இவர்களுடைய காம்போ கண்டிப்பாக பெரிய லாபத்தை கொடுக்கும் என்று பிளான் பண்ணி கமல் காய் நகர்த்துகிறார். ஆனால் கமல் முதலில் இப்படத்தை நான் தயாரிக்கிறேன் என்று சொல்லி பிறகு ஜகா வாங்கி விட்டார்.

தற்போது மறுபடியும் நான் தயாரிக்கிறேன் என்று சொல்வதனால் ரஜினிக்கு வேறு வழி இல்லாமல் ஓகே சொல்லிவிட்டார். அதனால் லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கும் இப்படத்தை கண்டிப்பாக ராஜ்கமல் நிறுவனமான கமல் தான் தயாரிக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது எல்லா விதத்திலும் வெற்றியை பார்த்து வரும் கமல் இப்படமும் அவருக்கு லாபத்தை கொடுக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Also read: ரஜினியின் சம்பளத்தை நெருங்கும் LCU லோகேஷ்.. போட்டி போட்டு காசை அள்ளி கொட்டும் தயாரிப்பாளர்கள்

Trending News