நடிகர் கமல்ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகர் நடிகைகளில் யாரேனும் ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு அடுத்தடுத்து தன்னுடைய படங்களிலும் வாய்ப்பு கொடுப்பார் என்பது தெரிந்த ஒன்றே.
அந்த வகையில் இசையமைப்பாளர் ஜிப்ரான் என்பவருக்கு தொடர்ந்து தன்னுடைய படங்களில் இசையமைக்க வாய்ப்பு கொடுத்து இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக மாற்றியுள்ளார்.
அதைப்போல் இன்னும் நிறைய நிறைய நடிகர்கள் கமலின் படங்களில் தொடர்ந்து இடம் பெற்று வருவதையும் பார்க்க முடிகிறது. அந்த வகையில் கடந்த சில வருடங்களாக பிரபல நடிகைக்கு தன்னுடைய படங்களில் வாய்ப்பு கொடுத்து நெருக்கம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.
அவர் வேறு யாரும் இல்லை. நம்ம ஆண்ட்ரியா தான். ஏற்கனவே கமல்ஹாசனுடன் விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்தபோது இருவருக்கும் கிசு கிசு என செய்திகள் வெளியானது. அதற்கு தகுந்தார்போல் இருவரும் நடிக்கும் படங்களில் முத்தக்காட்சிகளும் நெருக்கமான காட்சிகளும் அதிகமாகவே இடம்பெற்றன.
இருந்தாலும் தமிழ் சினிமாவில் ஆன்ட்ரியா மீது ஒரு நற்பெயர் உள்ளது. அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் காலம் கடந்தும் பேசப்படும் அளவுக்கு இருப்பதால் தன்னுடைய படங்களில் அவர் நடிப்பது பிளஸ் என்று கருதுகிறாராம் கமலஹாசன்.
அந்தவகையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கும் விக்ரம் படத்தில் ஆண்ட்ரியா இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும், சமீபத்தில் ஆண்ட்ரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடும்போது code red என்ற வாசகத்தை பயன்படுத்தியிருந்தார். இந்த வார்த்தை தான் விக்ரம் படத்தின் போஸ்டரில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.
