செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பிக் பாஸ் சீசன் 7-க்கு கமல் வாங்கும் சம்பளம்.. அடேங்கப்பா! ஒரு படத்தோட மொத்த பட்ஜெட்

Big Boss:வெள்ளி திரைக்கு நிகராய், சின்னத்திரையில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாய், பெரிதும் எதிர்பார்ப்பை உண்டுபடுத்தும் நிகழ்ச்சி தான் விஜய் டிவி வழங்கும் பிக் பாஸ். தற்போது துவங்க இருக்கும் பிக் பாஸ் சீசனில் கமலின் சம்பளம் குறித்த தகவலை இங்கு காண்போம்.

நடிப்பிற்கு ஓய்வு கொடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் உலக நாயகன் கமலஹாசன் சின்னத்திரையில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். மக்களிடையே சீரியலை காட்டிலும் நட்சத்திரங்களை கொண்டு டிஆர்பிக்காக நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியை காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

Also Read: விஜய்யின் 69 ஆவது படத்திற்கு லட்டு மாதிரியான கதை.. அட்லீயை ஓரங்கட்டி சரியான இடத்தில் செக் வைத்த ஷங்கர்

மேலும் விஜய் டிவி மேற்கொள்ளும் இத்தகைய நிகழ்ச்சியின் அனைத்து சீசனும் நல்ல ரேட்டிங்கை பெற்று வருகிறது. அவ்வாறு நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இந்த சீசனில் யார் கலந்து கொள்ளப் போகிறார் என ஹைபை உருவாக்கியும், மேலும் பிரபலங்களின் குண அம்சங்களை தெரிந்து கொள்ள வாய்ப்பையும் விஜய் டிவி இந்நிகழ்ச்சி மூலம் நன்கு பயன்படுத்திக் கொள்கிறது என்றே சொல்லலாம்.

இதுவரை வெற்றிகரமாக 6 சீசன் முடித்துள்ள நிலையில், தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 வரும் அக்டோபர் 8 தொடங்கும் என அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியின் மூலம் பல லட்ச வியூவர்ஸை தன் கைவசம் வைத்திருக்கும் விஜய் டிவி இந்த சீசனை 106 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

Also Read: உயரப் பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது.. விஜய்யை பார்த்து சிவகார்த்திகேயன் போட்ட பிளான்

வெள்ளித்திரையில் பிசியாக இருக்கும் கமல் இந்த சீசனில் தொகுத்து வழங்குவாரா என்ற கேள்வியையும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ளும் பிரபலங்களுக்கு சரியான தொகுப்பாளராய் கமல் மட்டும் தான் இருக்க முடியும் என்பதற்காகவே விஜய் டிவி அவருக்கு எவ்வளவு சம்பளம் வேணாலும் கொடுக்க தயாராக இருந்து வருகிறது.

அவ்வாறு ஏட்டிக்கு போட்டியாய், முரண்பாடான கருத்துக்களை முன்வைக்கும் அவர்களுக்கு சரியான பிக் பாஸாய் கமல் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு படத்தோட மொத்த பட்ஜெட்டானா சுமார் 150 கோடியை சம்பளமாக கொடுத்த விஜய் டிவி தயாராக உள்ளார்கள். மேலும் இவரின் திறமைக்கு இச்சம்பளத்தை பெற தகுதியானவர்தான் கமல் எனவும் சினிமா வட்டாரங்கள் கூறி வருகிறது.

Also Read: லியோவுக்கு எண்டு கார்டு போட்டதும் விடாமுயற்சிக்கு விடிவு காலம்.. 4 இடத்தை குறிவைத்த அஜித்

Trending News