ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து அசுரத்தனமாய் உயர்ந்த கமலின் சம்பளம்.. திருப்பதி உண்டியல் போல் கொட்டும் பணம்

Actor Kamalhassan: கமல்ஹாசன் இளம் நடிகர்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக மிகவும் சுறுசுறுப்பாக தன்னுடைய 68 வயதிலும் பல பரிமாணங்களில் பயணித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தொகுப்பாளராகவும் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியை பிரம்மாண்டமான முறையில் மக்களிடம் கொண்டு போய் சேர்த்ததற்கு முதன்மை காரணம் இவருடைய பேச்சுத் திறமை தான்.

அப்படிப்பட்ட இவர் பிக் பாஸில் முதல் சீசனில் இருந்து இப்பொழுது வரை இவரின் சம்பளம் அசுரத்தனமாக உயர்ந்து இருக்கிறது. அதாவது இதில் ஆரம்பத்தில் கலந்து கொள்ளும் போது கமல் கேட்ட தொகையை கொடுக்காமல் 6 கோடி என்று அவர்களே நிர்ணயித்து கொடுத்திருக்கிறார்கள்.

Also read: கமல்ஹாசன் மீது மாரி செல்வராஜுக்கு இருக்கும் வன்மம்.. தேவர்மகனை பழிவாங்க வரும் மாமன்னன்

கமலும் அதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல் அதை அப்படியே வாங்கி இருக்கிறார். இப்படியே ஒவ்வொரு சீசன்களும் கடந்த நிலையில் பெருசாக சொல்லும் படி இல்லாமல் ஒரு சில கோடிகள் மட்டுமே உயர்ந்திருக்கிறது. அப்பொழுதுதான் இவர் விக்ரம் படத்தில் நடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.

எந்த ஹீரோவும் பெறாத உச்சநிலையை பெற்று அசுர வளர்ச்சியை அடைந்திருக்கிறார். அத்துடன் பல பெரிய படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு படத்தில் 15 நாள் மட்டுமே நடிப்பதற்கு 150 கோடி வரை சம்பளம் வாங்கி இருக்கிறார். இதனால் இவருடைய ரேஞ்சே வேற லெவலுக்கு மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

Also read: மயில்சாமியை பார்க்க வராத இளம் நடிகர்கள்.. அதிலும் கமல்ஹாசன் இப்படி இருப்பது மிகவும் வருத்தமானது

அப்படிப்பட்ட சூழ்நிலையில் தற்போது ஆரம்பிக்க இருக்கிற பிக் பாஸ் 7 சீசனிலும் கமல் தான் வர வேண்டும் என்பதற்காக இவர் கேட்காமலேயே அதிகபட்ச சம்பளமாக 130 கோடியை கொடுக்கலாம் என்று நிர்ணயம் செய்து வைத்திருக்கிறார்கள். ஒரு படத்தின் மூலம் இவருடைய டர்னிங் பாயிண்டு எந்த அளவுக்கு உச்சத்தை தொட்டிருக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

இந்த வயதிலும் இவருடைய வளர்ச்சியில் எந்தவித அலட்டலும் இல்லாமல் ராஜதந்திரத்தை பயன்படுத்தி உலக நாயகனாக சுற்றி வருகிறார். இது அனைத்தும் இவருடைய விடாமுயற்சிக்கும் தன்னம்பிக்கை கிடைத்த பரிசு. அதனால்தான் பலருக்கும் ரோல் மாடலாக இருந்து வருகிறார். அத்துடன் எதிர்பார்க்காத அளவிற்கு பணம் மழையில் நனைந்து கொண்டு வருகிறார்.

Also read: நம்பியவர்களை டீலில் விட்ட கமல்ஹாசன்.. இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது

Trending News