உலகநாயகன் கமலஹாசன் சினிமாவில் இருக்கும் அனைத்து வித்தைகளையும் நன்கு அறிந்தவர் என்றே சொல்லலாம். இவருக்கு சினிமாவில் இருக்கும் அளவு கடந்த பற்றால் எப்பொழுதுமே வித்தியாசமாக கொண்டு போக வேண்டும் என்று நினைக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவர் நடிப்பால் சில படங்களில் மொத்த தியேட்டரையும் கண்ணீர் சிந்த வைத்திருப்பார். அப்படிப்பட்ட இவரின் படங்களை பற்றி பார்க்கலாம்.
மூன்றாம் பிறை: பாலு மகேந்திரா இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு மூன்றாம் பிறை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி, ஒய் ஜி மகேந்திரன் மற்றும் சில்க் ஸ்மிதா ஆகியோர் நடித்தார்கள். இப்படத்தின் கதையானது மனநிலை பாதிக்கப்பட்ட ஸ்ரீதேவிக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்து வரும் கமல்ஹாசனின் நடிப்பை உணர்வுபூர்வமாக வெளிக்காட்டிருப்பார். இறுதியில் ஸ்ரீதேவிக்கு பழைய ஞாபகங்கள் திரும்ப வந்த பொழுது இவரை அடையாளம் கொள்ளாமல் இருப்பது மற்றும் அதனை ஞாபகப்படுத்தும் விதமாக கமலஹாசன் செய்யும் விதத்தை பார்ப்பவர்கள் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.
குணா: சந்தான பாரதி இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமலஹாசன், ரேகா, ரோஷினி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எத்தனை தடவை பார்த்தாலும் அவர்கள் கண்ணில் கண்ணீர் வர வைக்கும். அந்த அளவிற்கு தத்துரூபமாக கமல் நடித்திருப்பார். இந்த படம் பெரிய பிளாப் ஆயிருந்தாலும் கமல் நடித்த குணா கதாபாத்திரம் மற்றும் அபிராமி கதாபாத்திரம் இன்னும் அனைவரின் மனதிலும் நிற்கிறது. இந்த படத்தை இப்பொழுது ரீ ரிலீஸ் செய்தால் பிரம்மாண்ட படமாக அமையும். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் அபிராமி கதாபாத்திரம் ஆழமாக பதிந்து இருக்கிறது.
மகாநதி: சந்தான பாரதி இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு மகாநதி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமலஹாசன் மற்றும் சுகன்யா நடித்தார்கள். இப்படத்தில் கமல் பல சூழ்ச்சியால் துன்பங்களை சந்தித்தும் மற்றும் காணாமல் போன மகளை மீட்டெடுக்கும் கதையாக அமைந்திருக்கும். பின்பு கடைசி காட்சியில் அவரது மகளை அந்த மாதிரி ஒரு இடத்தில் சந்திக்கும் தருணம் அனைவரையும் நெகிழ வைத்திருக்கும்.
விருமாண்டி: கமல்ஹாசன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு விருமாண்டி திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமல்ஹாசன், அபிராமி, பசுபதி, ரோகினி மற்றும் நெப்போலியன் ஆகியோர் நடித்தார்கள். இதில் கமல்ஹாசன் விருமாண்டி என்னும் கதாபாத்திரத்திலும், பசுபதி கொத்தாலா தேவன் எனும் கதாபாத்திரத்திலும் நடித்தார்கள். இதில் இவர்களுக்கிடையே நடக்கும் சண்டைகளை படமாக்கப்பட்டிருக்கும்.
நாயகன்: மணிரத்தினம் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு நாயகன் திரைப்படம் வெளிவந்தது. இதில் கமல்ஹாசன், சரண்யா, கார்த்திகா மற்றும் ஜனகராஜ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இதில் கமல், வேலு என்ற கதாபாத்திரத்தில் சாதாரண வாழ்க்கையில் வாழ்ந்து வரும் நிலையில் அவருக்கு ஏற்பட்ட பிரச்சினைகளால் டான் ஆக மாற்றப்படுவதை கதையாக எடுக்கப்பட்டிருக்கும். இப்படம் விமர்சன ரீதியாகவும் மற்றும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது.
பாபநாசம் : ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு பாபநாசம் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ் மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நடித்தார்கள். இதில் கமலஹாசன், சுயம்பு என்ற கதாபாத்திரத்தில் நடுத்தர குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருக்கும். இப்படத்தில் ஒரு காட்சியில் சில சூழ்ச்சியால் குடும்பத்தை போலீசார்கள் சேர்ந்து தாக்குவதை காண்பித்து பார்ப்பர்களின் மனதை கலங்கடிக்க செய்திருக்கும். இப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வெற்றி பெற்றது.