புதன்கிழமை, ஜனவரி 15, 2025

விசித்ரா, ஜோவிகா யார் பக்கம் நியாயம்.. அனல் பறக்கும் ஆண்டவரின் தீர்ப்பு

Bigg Boss Season 7: பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று படிப்பு முக்கியமா, இல்லையா என்று ஒரு விவாதமே நடைபெற்றது. அதாவது நடிகை விசித்ரா கண்டிப்பாக குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி முக்கியம் என்று விவாதித்து இருந்தார். ஆனால் ஜோவிகா தனக்கு படிப்பு வரவில்லை, மேலும் படிப்பு மட்டுமே முக்கியம் என்று நினைத்து தவறான முடிவுக்கு செல்லும் குழந்தைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்பதற்காக பிக் பாஸில் பங்கு பெற்றதாக ஜோவிகா கூறி இருந்தார்.

ஆனாலும் விசித்ரா தொடர்ந்து படிப்பை பற்றி பேசும்போது ஜோவிகா எரிச்சல் அடைந்து அவரின் வயதுக்கு கூட மரியாதை கொடுக்காமல் வா போ என்று ஒருமையில் பேசி இருந்தார். அவர் சொல்லும் விஷயம் சரியாக இருந்தாலும் அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில் ஜோவிகா தடுமாற்றம் அடைந்திருந்தார்.

Also Read : படிப்பு வரலைன்னா என்ன இந்த விஷயத்தில் ஜோவிகா கெட்டிக்காரி.. விஜயகுமாரை வம்பு இழுத்த வாரிசு

இந்நிலையில் கமல் இது குறித்து கண்டிப்பாக விவாதிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அதேபோல் அர்ச்சனையை தொடங்கி இருக்கிறார். அதாவது விசித்ரா மற்றும் ஜோவிகா இடையே தலைமுறை இடைவெளி அதிகமாக இருப்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக கூறியிருக்கிறார். அதாவது விசித்ரா காலத்தில் படிப்பு தான் முக்கியம் என்று ஒரு நிலை இருந்தது.

அதோடு மட்டுமல்லாமல் படிப்பின் முக்கியத்துவத்தை விசித்ரா கூறி இருக்கிறார். ஆனால் இப்போது உள்ள 2k கிட்ஸ் படிப்பை தாண்டி நிறைய விஷயம் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். படிப்பு வரலை என்றால் உயிரை கொடுத்தாவது போராட வேண்டும் என்பது இப்போது உள்ள நிலைப்பாடு கிடையாது.

Also Read : புலிக்குப் பிறந்தது பூனையாகுமா.? பிக்பாஸ் வீட்டையே அலறவிட்ட ஜோவிகா, வாயடைத்துப் போன விசித்ரா

மேலும் கற்றல் விதி இருக்க வேண்டுமே தவிர கற்றல் வதை இருக்கக் கூடாது என ஆணித்தரமாக ஆண்டவர் எடுத்துரைத்திருக்கிறார். அதாவது படிப்பு என்பது ஒரு அங்கம் தான். ஆனாலும் விசித்ரா சொல்வதில் அவர் பக்கமும் நியாயம் இருக்கிறது. குறைகளை எடுத்து சொல்லும்போது உடனே ஏற்றுக்கொள்ள சிலருக்கு பக்குவம் இருக்காது.

அதேபோல்தான் ஜோவிகாவும் தன்னை பற்றி பேசிய உடன் கோபத்தில் சில வார்த்தைகளை கூறியிருக்கிறார். ஆகையால் ஜோவிகா என்ற விஷயத்தை பொறுமையாக கையாண்டு இருக்கலாம் என்று ஆண்டவர் கூறியிருக்கிறார். இவ்வாறு இன்று காரசாரமான விவாதங்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி அரங்கேற இருக்கிறது.

Also Read : வனிதாவை விட ஸ்மார்ட் ஆக பிளே பண்ணும் ஜோவிகா.. எல்லாரையும் சிக்கவச்சிட்டு எஸ்கேப் ஆன தந்திரம்

Trending News