வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024

கமலின் விக்ரம் பட நடிகர்களின் சம்பள விபரம்.. பிச்சிக்கிட்டு போனா மொத்த வியாபாரம்

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கும் விக்ரம் திரைப்படத்தின் பட்ஜெட் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. முதன்முறையாக உலகநாயகன் கமலஹாசன் திரைப்படம் 200 கோடி வரை பட்ஜெட்டில் பிசினஸ் செய்து உள்ளது அதை பற்றி தற்போது பார்க்கலாம்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், உலகநாயகன் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த விக்ரம் திரைப்படம் தமிழ்,தெலுங்கு, மலையாளம்,கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனிடையே பேன் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள இத்திரைப்படம் கிட்டத்தட்ட 120 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இத்திரைப்படத்தில் நடித்ததற்காக உலக நாயகன் கமலஹாசனுக்கு 50 கோடி சம்பளமும்,விஜய் சேதுபதிக்கு 10 கோடியும், இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு 8 கோடியும், இசையமைப்பாளர் அனிருத் மற்றும் ஃபகத் பாசில் உள்ளிட்டோருக்கு தலம் 4 கோடி சம்பளமும்,நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 4 கோடி என மொத்தம் 80 கோடி வரை படத்தில் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாடு தியேட்டர் உரிமையை வாங்கியுள்ள உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் 35 கோடி ரூபாயும், சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் ஓடிடி தளமான டிஸ்னி ஹாஸ்டார் 98 கோடியும் கொடுத்து விக்ரம் திரைப்படத்தை வாங்கியுள்ளது.
மேலும் இத்திரைப்படத்தின் தயாரிப்பு செலவாக 40 கோடி வரை ஆகியுள்ளது.

அதுமட்டுமில்லாமல் விக்ரம் திரைப்படத்தின் ஆடியோ ரைட்ஸை 3 கோடி ரூபாய்க்கு சோனி நிறுவனம் வாங்கி உள்ளது. மேலும் கேரளா ஷிபு தமிம், கர்நாடகா கற்பக விநாயகா பிலிம்ஸ், ஆந்திரா சுதாகர் ரெட்டி உள்ளிட்ட தியேட்டர் ரைட்ஸிற்கு மொத்தமாக 15 கோடியே 75 லட்சமும் கொடுத்து திரைப்படத்தை வாங்கியுள்ளனர்.

கிட்டத்தட்ட உலகமெங்கும் 5 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள விக்ரம் திரைப்படத்தின் பிசினஸ் தற்போது 204 கோடியே 75 லட்சமாக உள்ளது. படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் லாபமாக 54 கோடியே 75 லட்சம் வரை ஈட்டி உள்ளது. இதனிடையே கண்டிப்பாக விக்ரம் படத்தின் ரிலீஸுக்கு பின் 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -spot_img

Trending News