ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வாட்சினால் உருவான நாயகன் கதை.. கமல் விளையாட்டாய் செய்து விஸ்வரூபம் கண்ட படம்

உலக நாயகன் கமலின் நடிப்பில் வெளியான நாயகன் படத்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் கமலின் திரை வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த கதை எப்படி உருவானது என்பது தான் ஆச்சரியமான விஷயம்.

அதாவது எழுத்தாளர் பாலகுமாரன், மணிரத்தினம், கமலஹாசன் ஆகியோர் நாயகன் கதை எழுதுவதற்காக மும்பை ஹோட்டலில் தங்கி இருந்தனர். அந்தச் சமயத்தில் கமலின் விலை உயர்ந்த கடிகாரம் காணாமல் போய் உள்ளது. மேலும் அந்த ஹோட்டல் முழுக்க தேடிப் பார்த்தும் கடிகாரம் கிடைக்கவில்லையாம்.

Also Read : உச்ச நட்சத்திரங்களை பார்த்தாலே வெறுப்பாகும் இயக்குனர்.. ரஜினி, கமல் இல்லாமலேயே கொடுத்த ஹிட் படங்கள்

இதனால் கடைசியாக ஹோட்டல் நிர்வாகத்திடம் என்னுடைய விலை உயர்ந்த கடிகாரம் காணவில்லை என்பதை சொல்லி உள்ளனர். மேலும் அந்த நிர்வாகம் தாதாவை பாருங்கள் நிச்சயம் உங்களுக்கு கடிகாரம் கிடைக்கும் என்று கூறியுள்ளனர். கடிகாரகத்திற்காக ஏன் அவரைப் பார்க்க வேண்டும் என முதலில் கமல் யோசித்துள்ளார்.

ஆனால் பிறகு போய் தான் பார்க்கலாம் என்று முடிவெடுத்து தாதாவை பார்க்கச் சென்றனர். மேலும் எதற்கு வந்தீர்கள் என்ற தாதா கேட்க, கமல் கடிகார விஷயத்தைச் சொல்லாமல் உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள தான் வந்திருக்கிறேன் என்று கூறினார். அப்போது அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என் மனைவியிடம் என்னை பற்றி கேட்டுக்கொள் என்று கூறியுள்ளார்.

Also Read : சிம்புக்காக ரிஸ்க் எடுக்கும் கமல்.. பாலிவுட்டிலிருந்து இறக்குமதியாகும் ஹீரோயின்

அதன் பிறகு கடிகாரம் தொலைந்த விஷயத்தை கமல் கூறி உள்ளார். நாளைக்குள் உன் கையில் கடிகாரம் இருக்கும் என உறுதி அளித்துவிட்டு தாதா சென்றுவிட்டாராம். தாதாவை பற்றிய விஷயங்களை அவரது மனைவியிடம் கேட்டு தெரிந்துகொண்டு அசந்து போய் விட்டாராம் கமல்.

மேலும் ஹோட்டலுக்கு செல்லும்போது கமலின் கையில் கடிகாரமும் வந்து விட்டதாம். அந்த நொடியே கமல் முடிவு செய்துவிட்டாராம் இந்த தாதாவை பற்றி தான் படத்தை எடுக்க வேண்டும் என்று. அவ்வாறு அந்த வாட்ச்சினால் தான் நாயகன் என்ற படம் உருவாகி இருந்தது.

Also Read : வடிவேலுவை தூக்கிவிடும் ரஜினி, கமல்.. ரகசியமாய் நடக்கும் மாஸ்டர் பிளான்

Trending News