சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

கரகாட்டக்காரன் கனகா ஞாபகம் இருக்கிறதா.? திருமணம் ஆகாமல் திசைமாறிய மர்மங்கள் நிறைந்த வாழ்க்கை

தமிழ் சினிமாவில் கரகாட்டக்காரன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் கனகா. இப்படத்தின் வெற்றியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றார். கனகா அதன் பிறகு ஏகப்பட்ட படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்தன. அப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்தார்.

அதன் பிறகு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான அதிசயப் பிறவி எனும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து பிரபலம் அடைந்தார். அதன்பிறகு பல ரசிகர்களும் கனகா அடுத்தடுத்து ரஜினிகாந்துடன் பல படங்களில் நடிப்பார் எதிர்பார்த்தனர். ஆனால் இப்படத்திற்கு பிறகு பெரிய அளவில் இவர்கள் படங்கள் நடிக்கவில்லை.

கனகா முதலில் ஒருவரை காதல் செய்து வந்துள்ளார். பின்பு இவர்கள் இருவருக்கும் சில வேறுபாடுகள் காரணமாக காதல் தோல்வி அடைந்தனர். அதன் பிறகு கல்யாணம் செய்வதற்கு பலரும் முயற்சி செய்தனர். ஆனால் இவருக்கு கல்யாண விருப்பம் இல்லாததால் கல்யாண வாழ்க்கையும் தோல்வி அடைந்தது.

kanaka
kanaka

அதன் பிறகு கனகாவின் அம்மாவின் இழப்பு அவரைப் பெரிய அளவில் துயரத்தில் ஆழ்த்தியது. அதன்பிறகு இவர் பெரிய அளவில் விழா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. இவர் கடைசியாக நடித்த படம் விரலுக்கேத்த வீக்கம், இதில் விவேக் ஜோடியாக நடித்திருப்பார். அதுமட்டுமில்லாமல் இவர் வசித்து வரும் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

இதனால் அவர் பெரிதும் தனிமையை மட்டுமே விரும்பி வருகிறார். வீட்டின் 2 பணிப்பெண்கள் மட்டும் உள்ளதாக பலரும் கூறியுள்ளனர். அதைத் தாண்டி வேறு யாரையும் அவர் உள்ளே அனுமதிப்பதில்லை என கூறியுள்ளனர். தற்போது கனகாவின் வாழ்க்கை குறித்து பலரும் வேதனையாக இருப்பதாக கூறி வருகின்றனர்.

Trending News