சினிமா மற்றும் அரசியல் என பிசியான நடிகராக வலம் வந்தாலும் கமலஹாசன் சின்னத்திரை டிவி நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது தொகுத்து வழங்கி வருகிறார். அதில் முக்கியமாக பார்க்கப்படுவது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.
நடந்து முடிந்த நான்கு பிக் பாஸ் சீசன்களையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கினார். முதலில் நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக வேலை செய்த கமலஹாசன் அடுத்தடுத்து சில சீசன்களில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை முன் வைத்து ரசிகர்களை சலிப்படைய வைத்தார்.
இப்போதும் பிக்பாஸ் ரசிகர்களை கேட்டால் கமலஹாசன் அரசியல் பற்றி பேசாமல் சாதாரணமாக நிகழ்ச்சியை நடத்தினாலே நன்றாக இருக்கும் என்ற கருத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக இருக்கின்றன.
இதுகுறித்து கருத்து கணிப்பு கேட்டறிந்த விஜய் டிவி நிறுவனம் கமலஹாசனிடம், இந்த முறை தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் தயவு செய்து அரசியல் பற்றி பேசவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார்களாம்.
ஆனால் கமலஹாசனோ, 60 வருட சினிமாவில் எந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்க வேண்டும் என்பது எனக்கு தெரியும், நீங்க எல்லாம் ஒன்னும் சொல்ல தேவையில்லை, அப்படி உங்கள் இஷ்டத்திற்கு நடத்த வேண்டும் என்றால் வேறு தொகுப்பாளரை பார்த்துக் கொள்ளுங்கள் என கோபப்பட்டு விட்டாராம்.
கமல்ஹாசனுக்காகத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்க்கிறார்கள் என்பதை புரிந்து கொண்ட விஜய் டிவி நிறுவனம், அரசியல் பற்றி பேச வேண்டாம் என்று சொல்லவில்லை, அதே நேரத்தில் நிகழ்ச்சியைப் பற்றியும் சொல்லுங்கள் என ஆடர் போட்டதை கோரிக்கையாக மாற்றி விட்டார்களாம்.