ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

30 வருடம் கழித்து ரீ-என்ட்ரி கொடுக்கும் 80’s கனவுக்கன்னி.. டீசர் எப்படி இருக்கு?

திருமணத்திற்கு பின்னர் நடிகைகள் சினிமாவில் இருந்து விலகுவதும் ஒரு இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க வருவதும் வழக்கமான ஒன்று தான். அப்படி பல நடிகைகள் கோலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். தற்போது அந்த வரிசையில் புதிதாக ஒரு நடிகை இடம் பிடித்துள்ளார்.

கோலிவுட்டில் 80 மற்றும் 90களில் பிரபலமாக வலம் வந்த நடிகை அமலா தான் அந்த நடிகை. தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வந்த சமயத்தில் பிரபல நடிகர் நாகார்ஜுனாவை காதல் திருமணம் செய்து கொண்டு அக்கட தேசத்தில் செட்டிலாகி விட்டார். இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இயக்குனர் ஸ்ரீகார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள கணம் என்ற படம் மூலம் தான் அமலா ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தில் சர்வானந்த், அமலா, சதீஷ், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாய் பாசத்தையும், அறிவியலையும் ஒன்றாக புனைத்து ஒரு டைம் மிஷின் படமாக கணம் படம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பிறகு மிகவும் உணர்வுப்பூர்வமான கேரக்டரில் நடித்துள்ள அமலாவை பார்க்கும் போது ரசிகர்களுக்கு அவர்களின் தாய் பற்றிய உணர்வு எழுமாம். அந்த அளவிற்கு படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், டைம் டிராவல் மூலம் இறந்த தாயின் அன்பை பெற துடிக்கும் ஒரு இளைஞனின் கதை தான் கணம் படத்தின் கதையாம். ஹீரோவாக நடிகர் சர்வானந்த் அவரது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். நிச்சயம் இப்படம் ரசிகர்கள் மனதில் உணர்வுப்பூர்வமான ஒரு வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News