தமிழ் சினிமாவில் எப்போதும் ரசிகர்கள் ஆதரவு பெரிய நடிகருக்கு மட்டுமே இருக்கும் அதனாலேயே பல தயாரிப்பாளர்கள் நடிகர்களை மட்டுமே கவனத்தில் வைத்துக் கொள்வார்கள்.
ஆனால் ஒரு படம் வெற்றி அடைவதற்கு நடிகர் மற்றும் நடிகைகள் மட்டும் போதாது. அப்படத்தில் பணியாற்றிய அனைத்து கலைஞர்களும் சிறப்பாக நடித்தால் மட்டுமே அந்த படம் ஒரு சிறப்பான வெற்றி படமாக அமையும்.
அப்படி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் போன்ற படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு தெரியக்கூடிய நடிகராக பிரபலமானவர் கந்தசாமி.

தற்போது கொரோனா காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் நடக்காமல் இருப்பதால் கஷ்டத்தில் இருப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார். மேலும் எங்களைப்போன்ற துணை நடிகர்களுக்கு அரசாங்கம் மற்றும் நடிகர் சங்கத்தில் இருந்து ஏதாவது ஒரு உதவி கரம் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.
எப்போதும் பெரிய நடிகர்களை மட்டுமே ஆதரவு கொடுக்கும் ரசிகர்கள் இப்படிப்பட்ட சிறு சிறு நடிகர்களுக்கும் ஆதரவு கொடுத்தால் மட்டுமே இவர்களும் சினிமாவை தாண்டி வாழ்க்கையில் ஜெயிக்க முடியும் என்பதை ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
சிவகார்த்திகேயன் தன்னுடன் நடித்த பல நடிகர்களுக்கு உதவி செய்வார் அதனால் கஷ்டத்தில் இருக்கும் கந்தசாமிக்கு சிவகார்த்திகேயன் உதவி செய்வார் என கூறி வருகின்றனர்.