சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

ஜெயலலிதாவாக மாறிய கங்கனா.. அடுத்து மிகபெரும் இந்திய தலைவியாக நடிக்க போகிறார்.. இதென்னடா கொடுமை

இந்தியில் பல்வேறு வெற்றிப்படங்களில் கதாநாயகியாக வலம் வந்தவர் கங்கணா ரணாவத். தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான இவர் மீண்டும் தமிழ் திரையுலகம் பக்கமே தலைகாட்டவில்லை.

அந்த அளவிற்கு மாற்று மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் கங்கனா இப்போது தலைவா, தெய்வத்திருமகள் இயககுனர் ஏ.எல்.விஜய் கூட்டணியில் அமோகமாக தயாராகிறது தலைவி.

நீண்ட காலத்திற்கு பிறகு கங்கனா மீண்டும் தமிழ் படத்திற்கு ஒப்புதல் தந்ததே ரசிகர்களுக்கு வரப்பிரசாதம். அதிலும் மறைந்த முன்னால் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா-வின் ரோலில் நடித்தார் என்பது அதிர வைக்கும் செய்தி.

kangana and jayalalitha
kangana and jayalalitha

ஒருவழியாக படத்தின் அனைத்து வேலைளும் முடிந்துவிட்ட நிலையில் இவருக்கான கால்ஷீட் முடியும் தருவாயில் இந்தியில் ஒரு பிரபல இயக்குனர் முன்னால் இந்திய பிரதமர் இரும்பு பெண் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குகிறார்.

அவர் இந்த விடயத்தை கங்கனாவிடம் விளக்கவே அம்மணியும் அதுதான் சரியென ஒப்புக்கொண்டாராம். தமிழகத்தின் இரும்பு பெண்ணில் இருந்து இந்தியாவின் இரும்பு பெண்ணாகிறார் கங்கனா.

indira-gandhi-1
indira-gandhi-1

கொடுத்து வைத்த மகராசி இரு படங்கள் அல்ல இரு தலைவர்கள் அல்ல இரு வரலாற்றை படைக்கவிருக்கிறார். படக்குழுவின் அடுத்த தகவலுக்காக காத்திருப்போம்.

Trending News