சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

என்கிட்ட உங்க பாட்சா பலிக்காது.. இயக்குனரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய கங்கனா

Kangana Ranaut : பாலிவுட்டில் மிகவும் துணிச்சலான நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் கங்கனா ரணாவத். பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வரும் இவர் தற்போது எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். யாராக இருந்தாலும் நேரடியாக தன்னுடைய விமர்சனத்தை வைக்க கூடியவர்.

இந்நிலையில் இயக்குனர் ஒருவரின் படத்தில் தன்னை நடிக்க வைக்க முயற்சிக்க வேண்டாம் என்று நேரடியாகவே நச்சுன்னு பதிலடி கொடுத்திருக்கிறார் கங்கனா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடிப்பில் வெளியாகி இருந்தது அனிமல் படம்.

இந்த படத்தில் பெண்களை இழிவுபடுத்தும் படியாகவும், ஆணாதிக்கத்தை வற்புறுத்தும் படியாகவும் காட்சி அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. அதுவும் பாடகர் ஸ்ரீனிவாசன் அனிமல்கள் சேர்ந்த எடுத்த படம் தான் அனிமல் என்று கடுமையாக தனது கருத்தை வெளியிட்டு இருந்தார்.

Also Read : ஹாலிவுட் லெவலுக்கு கவர்ச்சி காட்டிய 5 நடிகைகள்.. தமன்னாவுக்கு டஃப் கொடுக்கும் ராஷ்மிகா

பல பிரபலங்கள் அனிமல் படத்திற்கு மோசமான விமர்சனங்களை கொடுத்து வந்த நிலையில், கங்கணாவும் சமீபகாலமாக பெண்களின் கண்ணியத்திற்கு களங்கம் விளைவிக்கும் விதமாக படங்கள் வருவதாக குறிப்பிட்டிருந்தார். இதனால் சந்தீப் ரெட்டி கங்கணாவின் விமர்சனத்தை குறிப்பிட்டு இதனால் தனக்கு எந்த கோபமும் இல்லை.

இனி வரும் காலங்களில் கங்கனாவை வைத்து படம் எடுக்க முயற்சி செய்வேன் என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்து கங்கணா, என்னை உங்கள் படத்தில் நடிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும், ஒருவேளை நடித்தாலும் ஆணாதிக்கம் உள்ள உங்கள் கதாபாத்திரங்கள் பெண்களை போற்றுபவர்களாக ஆகிவிடுவார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்.

Also Read : புரளியால் ராஷ்மிகா வைத்த செக்.. தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்

Trending News