கங்குவா படம் இந்த வருடத்தில் இந்தியன் 2 படத்துக்கு பிறகு அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படமாக உள்ளது. இந்த படத்தின் ஒவ்வொரு ப்ரோமோஷன் நிகழ்விலும் சூர்யா மிகவும் confident-ஆக பேசினார். ஆனால் படத்தின் தோல்வியை சற்றும் எதிர்பார்க்காதவர், மிகவும் உடைந்து போய்விட்டார்.
கங்குவா படத்தை பொறுத்த வரையில், நல்ல கதை, நல்ல நடிப்பு, சிறந்த மேக்கிங் இருந்தாலும் கூட, திரைக்கதை சரியாக இல்லாத காரணத்தினாலும், படத்தின் ஆரம்ப காட்சிகள் Cringe-ஆக இருந்ததால், மக்களுக்கு பிடிக்கவில்லை.
முக்கியமாக, தியேட்டருக்கு போயி, காதில் ரத்தம் வந்துவிட்டது என்று ரசிகர்கள் சொல்லும் அளவிற்கு இறைச்சலாக இருந்துள்ளது.
இப்படியா காப்பி அடிக்கிறது..
மக்கள் சொன்ன இந்த குறைகளை எல்லாம் சரி செய்து, படத்தை மீண்டும் ஒளிபரப்பினார்கள். அப்போது குடும்ப audience-களிடம் இருந்து ஓரளவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருந்தது. இப்படி இருக்க, தற்போது கங்குவா படத்துல முக்கிய காட்சி வரக்கூடிய ஒரு location அட்டு copy என்று நெட்டிசன்கள் நக்கல் செய்து வருகின்றனர்.
கங்குவா படத்தில் வரும் periodic காட்சிகளில் அந்த சிறுவனுடன் சூர்யா காட்டுக்குள் செல்வார். அப்போது ஒரு கடற்கரையில் வைத்து ஒரு ஷாட் எடுக்கப்பட்டிருக்கும். அந்த ஷாட் ஏற்கனவே தேவரா படத்திலும் வைத்துள்ளார்கள்.
தேவரா படத்தில் வரும் சுட்டமல்லி பாடல் அங்கு தான் எடுத்திருப்பார்கள். அதே இடத்தில் தான் அந்த சிறுவனை சமாதானம் செய்யும் பாடலையும் எடுத்துள்ளார்கள்.
இந்த நிலையில், எந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் முடிந்தது என்று தெரியவில்லை. ஆனால் மொத்தத்தில் இரண்டு படக்குழுவினரும் சேர்ந்து அந்த கடற்கரையை நன்றாக ட்ரெண்ட் செய்துவிட்டார்கள்.
இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால், அங்கு ஷூட்டிங் நடத்திய இரண்டு படங்களும் வரவேற்பு பெறவில்லை என்பதுதான்.