ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில், இயக்குனர் சிவா இயக்கத்தில், சூர்யா முன்னணி கேரக்டரில் நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. மிகப்பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
11ம் நூற்றாண்டு மற்றும் தற்காலத்தில் நடக்கும் சம்பவங்களாக ‘கங்குவா’ படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. படம் மாபெரும் பொருட்ச்செலவில் எடுக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸ் வரும் என்று எதிர்பார்த்த படக்குழுவுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.
படம் வெளியான நாள் முதலே நெகடிவ் review வந்துகொண்டிருக்கிறது. இதை தொடர்ந்து, கோவத்தில் கொதித்து போன ஜோதிகா, தன்னுடைய review சொல்லி, நெகடிவ் ஆக விமர்சிப்பவர்களை கடுமையாக சாடி இருந்தார். இது ஒரு பேசும்பொருளானது.
100 கோடியை கடந்த சூர்யா படம்
என்னதான் படத்தை வசைபாடினாலும், படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திக்கொண்டு தான் இருக்கிறது. படம் வெளியான முதல் நாளில் மட்டும் இந்த திரைப்படம் 56 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இது சூர்யாவின் கேரியரில் அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய ஓப்பனிங் என்பது கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் கங்குவா திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் (சனிக்கிழமை) உலகம் முழுவதும் ரூ.127.64 கோடி வசூலித்துள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இதுவரை ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது என்றும் சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் விமர்சன ரீதியாக சொதப்பல் என்றாலும், படத்துக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும், 2024-ஆம் ஆண்டின் 9-ஆவது 100 கோடி வசூலித்த படமாக கங்குவா உள்ளது. இருப்பினும், இன்னும் போட்ட பணத்தை எடுக்கவில்லை. எப்படியம் எடுத்துவிடும் என்று படக்குழு நம்புகிறது.