சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ராஜமவுலிக்கே சவால் விடும் கங்குவா படக்குழு.. தாய்லாந்தில் நடக்கும் தரமான சம்பவம்

Kanguva: 350 கோடி பட்ஜெட்டில் தயாராகும் படம் தான் சூர்யாவின் கங்குவா. இந்தப் படத்தை பிரம்மாண்டத்திற்கு பஞ்சம் இல்லாத ராஜமவுலியின் படங்களுக்கே சவால் விடும் வகையில், சிறுத்தை சிவா இயக்குகிறார். இதற்காகவே தாய்லாந்தில் தரமான சம்பவமும் நடக்கப் போகிறது.

இதனை தமிழ் உட்பட 10 இந்திய மொழிகளில் இயக்கிக் கொண்டிருக்கிறார். சில வெளிநாட்டு மொழிகளிலும் டப் செய்ய இருப்பதாக கூறப்படுவதால் கங்குவா உலக திரைப்படமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.  அதிலும் சமீபத்தில் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை உச்சத்திற்கு கொண்டு சென்றனர்.

Also Read: சூர்யாவின் கங்குவா படத்தின் அப்டேட்.. வைரலாகும் குரூப் புகைப்படம்

இதில் சூர்யா அசுரத்தனமான தன்னுடைய நடிப்பை வெளிக் காட்டியுள்ளார். இதன் படப்பிடிப்பு கொடைக்கானலில் நிறைவு பெற்று அடுத்ததாக தாய்லாந்தில் நடக்கப்போகிறது. இதற்காக கங்குவா பட குழுவின் மொத்த டீமும் தாய்லாந்திற்கு பறந்தது. நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் சூட்டிங் நிறைவு பெறுகிறது.

அதன் பின் எடிட்டிங் வேலையில் முழு கவனம் செலுத்துகிறார்கள். விஎஃப்எக்ஸ் எனப்படும் கிராபிக்ஸ் வேலைகளில் முழு கவனம் செலுத்தி வருகிறது கங்குவா டீம். இப்பொழுது ராஜமவுலிக்கு சவால் விடும் வகையில் சண்டை காட்சியை படமாக்க இருக்கிறது.

Also Read: கங்குவா படத்தில் குவிந்துள்ள 10 பிரபலங்கள்.. பிரசாந்த் நீல், ராஜமௌலிக்கே டஃப் கொடுக்கும் சிறுத்தை சிவா

ராஜமவுலி இயக்கிய ஆர்ஆர்ஆர் படத்தில் மிருகங்களுக்கு நடுவே ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் சண்டை போடுவார்கள். அதைப்போல சூர்யாவும் மிருகங்களுக்கு நடுவே சண்டை போடவிருக்கிறார். பயிற்சி பெற்ற விலங்குகள் எல்லாம் தாய்லாந்தில் தான் இருக்கிறது.

அதற்காகத்தான் கங்குவா பட குழு தாய்லாந்து சென்று இருக்கிறது. அங்கே சிங்கம் மற்றும் புலிகளுடன் ரிங் மாஸ்டர் ஒருவரையும் இந்த படத்திற்காக புக் செய்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா மிருகங்களுக்கு நடுவே புல்லரிக்கும் வகையில் சண்டை போடப் போகிறார், அதற்காகவே இப்போது மொத்த பட குழுவும் தாய்லாந்தில் மையம் கொண்டுள்ளது.

Also Read: 2024இல் உலகளவில் எதிர்பார்க்கப்படும் 5 பான் இந்தியா படங்கள்.. நாலு டைனோசர்களுடன் மோதும் சிவகார்த்திகேயன்

Trending News