திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

ஒரே வார்த்தையில் தெறிக்க விட்ட சூர்யா.. அசுரத்தனமாக வெளிவந்த கங்குவா கிளிம்ஸ் வீடியோ

Kanguva Glimpse: இப்படி ஒரு பிறந்தநாள் சர்ப்ரைசை எந்த நடிகரும் கொடுக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு சூர்யா மிரட்டி விட்டிருக்கிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் 3டி தொழில்நுட்பம் கொண்டு 10 மொழிகளில் உருவாகி வரும் படம் தான் கங்குவா.

கடந்த பல மாதங்களாக விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோ காட்சி இன்று சூர்யா பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என பட குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன் படி நள்ளிரவு 12 மணி எப்போது வரும் என ரசிகர்கள் சோசியல் மீடியாவே கதி என கிடந்தனர்.

Also read: ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த அருண் விஜய்.. சூர்யாவின் முடிவால் அடித்த ஜாக்பாட்

இப்படி பலரையும் காக்க வைத்த அந்த வீடியோ சூர்யாவின் பிறந்தநாள் ட்ரீட்டாக அட்டகாசமாக வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே இப்படம் சூர்யாவுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் வீடியோவை பார்த்த பலரும் மெய் சிலிர்த்து போய் இருக்கின்றனர்.

அந்த வகையில் சூர்யாவின் கதாபாத்திரத்தை நமக்கு உணர்த்தும் வகையில் இருக்கும் பாடல் வரிகள் வேற லெவலில் இருக்கிறது. அற்புதம் செய்யும் வீரன் இவன் கங்கா கங்கா கங்குவா என சூர்யாவின் புகழ் பாடிவரும் இதில் அவருடைய தோற்றமும், பின்னணி இசையும், ஒளிப்பதிவும் ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது.

Also read: கொல மாஸாக வெளிவந்த கங்குவா பட போஸ்டர்.. அடேங்கப்பா! அசந்து போன சூர்யா

அதிலும் அரக்கர்களை வதம் செய்யும் சூர்யா வீடியோவின் இறுதியில் நலமா என்று கேட்கும் அந்த ஒரு வார்த்தை ரசிகர்களை மொத்தமாக காலி செய்து விட்டது. அந்த அளவுக்கு அசுரத்தனமாக வெளிவந்திருக்கும் இந்த வீடியோ இப்போது சோசியல் மீடியாவை ஆதிக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடும் இந்த கங்குவாவுக்கு எங்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

- Advertisement -

Trending News