வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

ஓ அப்படியா செய்தி.. பாகுபலி மாதிரியாம்.. படம் பார்த்துவிட்டு அதை கூறுவோம்

சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றதையடுத்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்திருக்கிறார் சூர்யா. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருக்கிறது.

படம் நவம்பர் 14 ரிலீஸ் ஆகவிருக்கும் நிலையில், ப்ரோமோஷன் படு ஜோராக நடந்து வருகிறது.  சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் ஹை பட்ஜெட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்கிறார். சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியடைந்ததால் இந்தப் படத்தை வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று தீவிரத்தில் கடுமையாக உழைத்துள்ளார்.

இந்த நிலையில் பட ப்ரோமோஷனில் சிறுத்தை சிவா கூறிய விஷயங் தற்போது, நெட்டிசன்கள் கவனத்தை பெற்று வருகிறது. சிறுத்தை சிவா கூறியதாவது, “பாகுபலி எடுக்கும்போதே, கண்டிப்பாக இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்.  நிறைய கிளைக்கதைகள் திருப்பங்கள் படத்தில் உள்ளன.”

அன்றே கணித்த ரசிகர்கள்

“இதை ஒரு சீரிஸ் ஆகக்கூட எடுக்கலாம்.  பாகுபலி படத்தில் எப்படி இரண்டாம் பாகத்திற்கு ஒரு லீட் இருக்குமோ.  அதே மாதிரி தான்.  பாகுபலி மாதிரி தான் கங்குவா படத்திலும் இரண்டாம் பாகத்திற்கான லீட் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதை கேட்ட ரசிகர்கள், “நாங்க தான் அன்னிக்கே இத கண்டுபிடித்துவிட்டோமே. ட்ரைலர் பார்க்கும்போதே, பாகுபலி பீல் தான் இருந்தது. இப்போ நீங்களே சொல்லுகிறீர்கள்.  இரண்டாம் பாகத்திற்கான லீட் பாகுபலியை போல இருப்பது எங்களுக்கு பிரச்சனை இல்லை.  மொத்தமாகவே பாகுபலி போல இருந்துவிட கூடாது” என்றும் கூறி வருகின்றனர் 

Trending News