தீபாவளிக்கு உச்ச நட்சத்திரங்கள் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில், சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பக்கர் ஆகிய படங்கள் வந்துள்ளன. இதுதவிர தெலுங்கில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியிருக்கும் லக்கி பாஸ்கர் தமிழிலும் வெளியாகியிருக்கிறது.
இதில் அமரன், லக்கி பாஸ்கர் படங்களுக்கு இடையே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கடுமையான போட்டி நிலவுகிறது. பிரதர் படத்திற்கும், ப்ளடி பெக்கர் படத்திற்கும் கலவையான விமர்சனமே வந்துகொண்டிருக்கிறது.
இந்த் சூழ்நிலையில் தீபாவளிக்கு அடுத்தபடியாக வெளியாக இருக்கும் பெரிய படமாக சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் உள்ளது. பேண்டஸி கலந்த ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படம் நவம்பர் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. 38 மொழிகளில் இந்த படம் வெளியாவதால், கண்டிப்பாக 1000 கோடி வசூல் செய்யும் என்று படக்குழுவினரும் ரசிகர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.
ரசிகர்களை குஷி படுத்த படக்குழுவினர் எடுத்த முடிவு
தமிழ்நாட்டில் சமீப காலமாக எந்த படத்துக்கும் அதிகாலை காட்சி அனுமதி அளிக்கப்படுவதில்லை. அண்டை மாநிலங்களான ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கர்நாடாகாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஹாப்பியாக உள்ளனர்.
ஆனால் இங்கு உள்ள ரசிகர்கள் எங்களுக்கு அதிகாலை காட்சி வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வந்தனர். மேலும் இதற்காக மனு அளித்திருப்பாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வேட்டையன் படத்திற்கு ஸ்பெஷல் ஷோ, 4 மணி ஷோ அனுமதித்த நிலையில் சூர்யாவின் கங்குவா படத்திற்கும் அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்க படுகிறது. ஏன் என்றால், சமீபத்தில் கூட என்னுடைய நண்பர் உதயநிதி ஸ்டாலின் என்று சொன்ன சூர்யா விஜய் பெயரை சொல்லாமல் வெறுமனே நண்பர் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் உதயநிதி சிபாரிசின் அடிப்படையில் 4 மணி காட்சி வழங்க அதிக வாய்ப்பு உள்ளது.