வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

6000 இல்ல.. 10,000 தியேட்டர், 2000 கோடி அள்ளுவதை யாராலும் தடுக்க முடியாது

சிறுத்தை சிவா – சூர்யா கூட்டணியில் உருவாகியுள்ள படம் கங்குவா. ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார். மேலும் வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார்.

இவர்களைத் தவிர்த்து யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வரும் இப்படத்தின் க்ளிம்ஸ், டீசர், ட்ரைலர் மற்றும் பாடல்கள் அனைத்தும் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வருகிற 14ஆம் தேதி 38 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

வெளியான வேற லெவல் அப்டேட்

இந்த நிலையில் ஏற்கனவே கங்குவா படம், 6000 தியேட்டர்களில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, 10,000 தியேட்டர்களில் வெளியாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்கு இவ்வளவு மாஸ் கொடுக்கும் ஒரு படமாக இதுவே அமைந்துள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே 700 தியேட்டர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் மட்டும் 2500 தியேட்டர்களும், வடஇந்தியாவில் 3500 தியேட்டர்களும் ஒப்பந்தமாகியுள்ளது. கூட்டி கழித்து பார்த்தால் 10,000 தியேட்டர்களில் வெளியாகிறது.

இதற்க்கு முன் வசூல் வேட்டை நடத்திய படங்களில், ஜவான் படமும் 10,000 தியேட்டர்களில் வெளியாகி 1000 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த நிலையில், கதை மட்டும் பிக்கப் ஆகி விட்டால், 2000 கோடி அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது.

Trending News