புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஈவிபி-யில் சூர்யா காட்டிய பிரம்மாண்டம்.. பாலிவுட் நடிகருக்கே ஆட்டம் காட்டிய கங்குவா டீம்

Kanguva movie team surprised the Bollywood actor: நடிப்பு அரக்கனான சூர்யா இப்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சுமார் 350 கோடி பட்ஜெட்டில் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டுடியோ கிரீன்ஸ் நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படம் 38 மொழிகளில் உலகம் முழுவதும் ஐபேக், 3டி முறையில் வெளியிட உள்ளனர்.

இதில் சூர்யா முதல் முதலாக 13 கெட்டப்பில் தன்னுடைய அசுரத்தனமான நடிப்பை வெளிக்காட்டுகிறார். இந்த படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடிக்கிறார். ஹிந்தியில் முரட்டு வில்லனாக மிரட்டி கொண்டிருக்கும் பாபி தியோலை கங்குவா பட குழு பிரமிக்க வைத்துள்ளது.

தற்போது சென்னையில் உள்ள ஈவிபி செட்டில் ஒரு பிரம்மாண்டமான கப்பல் செட் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் அந்தக் கப்பல் தான் பாபி தியோல் உடைய உலகம். பொதுவாக இதையெல்லாம் பாலிவுட்டில் செட் போட்டு விடுவார்கள், இவ்வளவு எல்லாம் மெனக்கெடமாட்டார்கள். ஆனால் கங்குவா படக் குழுவினரின் டெடிகேஷன் பார்த்து, ‘இப்படி எல்லாம் பண்ண முடியுமா?’ என்று மிரண்டு போய்விட்டாராம்.

Also Read: அடுத்த வருடம் சூர்யாவிற்கு வசந்த காலம் தான்.. அஜித், விஜய்க்கு கிடைக்காத யோகம்

பாலிவுட் நடிகரை மிரட்டிய கங்குவா டீம்

அதுமட்டுமல்ல இங்கே ஏழு மணிக்கு எல்லாம் ஷூட்டிங் ஆரம்பிக்கிறார்கள். ஆனால் இவர் ஹிந்தியில் நடிக்கும் படங்களுக்காக 12 மணிக்கு தான் எந்திரிப்பார்களாம். கங்குவா படத்தில் பாபி தியோல் நடித்துவரும் கதாபாத்திரம், அவருடைய வழக்கமா நடிக்கும் கேரக்டர்களில் இருந்து வேறுபட்டு இருக்கிறதாம்.

இது அவருக்கு முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தையும் தந்திருக்கிறது. சுத்தமாகவே தமிழ் தெரியாத இவருக்கு, சிறுத்தை சிவா தான் எல்லாத்தையும் தெளிவாக விவரிக்கிறாராம். சூர்யா பாபி தியோலுடன் திஷா பதானி, யோகி பாபு, லெடின் கிங்ஸ்லி, ஆனந்த்ராஜ், கோவை சரளா உள்ளிட்ட பிரபலங்களும் இணைந்து நடக்கின்றனர்.

Also Read: ரேஸுக்கு தயாராகும் முன்னணி நடிகர்களின் 6 மெகா பட்ஜெட் படங்கள்.. பரம்பரை இயக்குனரிடம் மாட்டிக் கொண்ட தூள் நடிகர்

Trending News