2 பாகங்களாக வெளிவரும் கங்குவா.. ஷூட்டிங், ரிலீஸ் மொத்த அப்டேட் கொடுத்த ஞானவேல் ராஜா

Kanguva: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகிறது. கிட்டத்தட்ட 300 கோடி பட்ஜெட்டில் தயாராகி உள்ள இப்படத்தை ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் யு வி கிரியேஷன்ஸ் உடன் சேர்ந்து தயாரித்துள்ளது.

பேண்டஸி ஆக்சன் படமாக உருவாகியுள்ள இதில் சூர்யா இரு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த வீடியோக்கள், போஸ்டர்கள் அனைத்தும் பயங்கர மிரட்டலாக இருந்தது.

அதேபோல் தமிழ், மலையாளம், ஹிந்தி உட்பட 38 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. மேலும் படத்தின் பிரீ பிசினஸ் இதுவரை இல்லாத அளவுக்கு இருப்பதும் கூடுதல் சிறப்பாக அமைந்துள்ளது.

டபுள் ட்ரீட் கொடுக்கும் சூர்யா

அந்த வகையில் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றுள்ளது. மேலும் சாட்டிலைட், ஆடியோ உரிமம் என அனைத்தும் சேர்ந்து 500 கோடிகளை தயாரிப்பாளர் இப்போதே கையில் அள்ளி இருக்கிறார்.

இந்நிலையில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கங்குவா இரு பாகங்களாக வெளிவரும் என தெரிவித்துள்ளார். அதன்படி முதல் பாகம் மட்டுமே 185 நாட்களுக்கும் மேலாக படப்பிடிப்பு நடத்தப்பட்டிருக்கிறது.

அதை தொடர்ந்து இரண்டாவது பாகத்தின் ஷூட்டிங் அடுத்த வருடத்தில் தொடங்கும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் படம் 2027 தொடக்கம் அல்லது கோடை விடுமுறையை முன்னிட்டு வெளிவரும் என ரிலீஸ் அறிவிப்பையும் கொடுத்துள்ளார்.

இது சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய அப்டேட் ஆக இருக்கிறது. பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படம் ஒரு பாகம் தான் என பலரும் நினைத்திருந்தனர். ஆனால் அப்படி இல்லை என தயாரிப்பாளர் கூறியிருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

ஆயிரம் கோடி வசூலுக்கு தயாராகும் கங்குவா

Next Story

- Advertisement -