வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இரண்டாவது நாள் சரிவை சந்தித்த கங்குவா.. கலெக்சன் ரிப்போர்ட்

Kanguva Second Day Collection : சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் கங்குவா படம் வெளியாகி இருந்தது. மிகுந்த பொருட்ச அளவில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் அவற்றையெல்லாம் சுக்குநூறாகும் அளவுக்கு படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 13 மொழிகளில் வெளியான இந்த படம் எப்படியும் நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டாம் நாள் சரிவை சந்தித்திருக்கிறது.

திஷா பதானி, பாபி பியோல் போன்ற பெரிய பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர். சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தி யாரும் எதிர்பார்க்காத வகையில் கேமியா தோற்றத்தில் வந்திருந்தார். இவ்வளவு சிரமப்படும் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனம் வருவதற்கு மேக்கிங் மற்றும் இசை காரணம் என்று கூறப்படுகிறது.

கங்குவா படத்தின் இரண்டாம் நாள் வசூல்

முதல் நாளில் இந்த படம் கிட்டத்தட்ட 58 கோடி வசூலை உலகம் முழுவதும் பெற்றதாக தகவல் வெளியானது. ஆனால் படத்தைப் பார்த்து விட்டு மக்கள் கூறிய விமர்சனத்தால் இரண்டாம் நாள் நேற்று வெள்ளிக்கிழமை எதிர்பார்க்காத அளவுக்கு வசூல் கணிசமாக குறைந்து இருக்கிறது.

அதன்படி நேற்று மட்டும் உலகம் முழுவதும் வெறும் 20 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மேலும் இன்று மற்றும் நாளை விடுமுறை என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்குமா அல்லது நெகட்டிவ் விமர்சனத்தால் இன்னும் வசூல் குறையுமா என்பது தெரியவரும்.

இதுவரை இரண்டு நாட்களில் கங்குவா படம் 80 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படத்தின் பிரமோஷன் பல கோடிகள் செலவு செய்து உள்ளார். இப்படி இருக்கையில் போட்ட பட்ஜெட்டை கங்குவா எடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Trending News