கங்குவா ரிலீஸுக்கு முன்பு இப்படம் ரூ.2000 கோடி வசூலிக்கும் என தயாரிப்பாளர் கூறினார். பட புரமோசன் நிகழ்ச்சியில், இப்படக்குழுவினர் ஓவர் ஹைப் ஏற்றினர்.
ரிலீசான முதல் நாளே இப்படத்துக்கு நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தன. தமிழில் மட்டும் தான் இப்படி என்றால், இந்தியா முழுக்க இதே நிலை என தகவல் வெளியானது.
இப்படத்தின் இரைச்சல் அதிகம், திரைக்கதை சரியில்லை என பல விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்தது.
இணையத்தில் வெளியான கங்குவா படம்; இதுக்குமா ஓட்டுவீங்க?
இப்படியிருக்க, கங்குவா படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்து நெட்டிசன்கள் அதன் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சிலர், இதைவிட தன்னால் காட்சிகளை எடுக்க முடியும். இத்தனை கோடி செலவழித்து அதெப்படி இப்படி காட்சிகளை எடுத்தனர்? இதை எப்படி தியேட்டரில் பார்த்தீர்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
வசூலிலும் கங்குவா படம் பின்னடைவைச் சந்தித்தது. இப்போது மீண்டும் இப்படத்தை ட்ரோல் செய்கின்றனர். அமேசான் ப்ரைம் நிறுவனம்தான் இதன் ஓடிடி ரைஸ்ட் வாங்கியுள்ளது. வரும் டிசம்பர் 12 ஆம் தேதி கங்குவா ஓடிடியில் ரிலீசாகும்போதும் இதைக் கிண்டல் செய்வார்கள் என கூறப்படுகிறது.
சூர்யா சொன்னதை சுட்டிக் காட்டும் நெட்டிசன்ஸ்
இதுவரை இல்லாத அளவுக்கு கங்குவா படம் விமர்சிக்கப்படுகிறது. இது திட்டமிட்ட சதியா? இல்லை சூர்யாவுக்கு வந்த சோதனையா எனக் கேள்வி எழுந்துள்ளது.
’’படம் நன்றாக இல்லை எனில் ஓடவைக்க வேண்டாம்’’ என சூர்யாவே ஒருமுறை கூறியிருந்தார். அதைக் குறிப்பிட்டும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.