சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

வீரா சீரியலில் மாறனை பழிவாங்க ராகவனை பகடைக்காயாக யூஸ் பண்ணும் கண்மணி.. மனசு மாறி வரும் வீரா

Veera Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில், அண்ணன் இறப்பதற்கு காரணம் மாறன் தான் என்று தவறாக புரிந்து கொண்டு கண்மணி, ராகவனை கல்யாணம் பண்ணி பழி வாங்குவதற்காக மருமகளாக வந்திருக்கிறார். அடுத்து தவிர்க்க முடியாத சூழலில் வீரா கழுத்தில் மாறன் கட்டாய தாலி கட்டி விட்டார். இதனால் மாறனை விட்டு விலக வேண்டும் என்று நினைத்த வீராவிற்கு கண்மணியின் பழிவாங்கும் எண்ணத்தை தெரிந்து கொண்டார்.

அதனால் கன்மணியிடமிருந்து மாறன் குடும்பத்தையும் அக்காவின் வாழ்க்கையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக வீரா, மாறனை ஏற்றுக் கொண்டதாக வந்து விட்டார். இருந்தாலும் தன்னுடைய சுயநலத்திற்காக மாறனை பலியாடாக ஆக்கிறோம் என்ற நினைப்பில் மாறனை விட்டு பிரியலாம் என்று விவாகரத்தை கேட்டு விட்டார்.

வீராவை விட்டு பிரிய மனமில்லாத மாறன், உனக்கு நான் விவாகரத்து பேப்பரில் கையெழுத்து போட வேண்டும் என்றால் கொஞ்சம் நாளைக்கு என்னுடைய தோழியாக என் ஆசை எல்லாம் நிறைவேற்ற வேண்டும் என்று கண்டிஷன் போட்டார். அதன் படி ஒவ்வொரு விஷயத்தையும் நிறைவேற்றும் விதமாக கொஞ்சம் கொஞ்சமாக வீரவின் மனசில் மாறன் இடம் பிடித்து விடுவார் என்று நம்பிக்கை வைத்திருக்கிறார்.

அந்த வகையில் மொட்டை மாடியில் வீராவை தனியாக கூப்பிட்டு மனம் விட்டு பேசலாம் என்று சில ஏற்பாடுகளை பண்ணி வீராவை கூட்டிட்டு வரும்போது அங்கே எதிர்பாராத விதமாக ராகவனும் வந்துவிடுகிறார். உடனே மாறன் மற்றும் வீரா பின்னாடி போய் ஒளிந்து கொள்கிறார்கள். ராகவன் இது யாரு ஏற்பாடு பண்ணினார் என்று தெரியாமலேயே கண்மணிக்கு ஃபோன் பண்ணி மாடிக்கு வரச் சொல்லி உனக்காக தான் நான் இத்தனையும் பண்ணி இருக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

உடனே கண்மணி, இந்த குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்றால் உன்னை நான் கைக்குள் போட்டு சாவி கொடுக்கும் பொம்மையாக ஆட்டி படைத்தால்தான் முடியும் என்று ராகவனை பகடைக்காயாக கண்மணி யூஸ் பண்ணிக்க பிளான் பண்ணி விட்டார். இது எதுவும் தெரியாத மாறன், அண்ணன் மற்றும் அண்ணியின் வாழ்க்கை சந்தோசமாக இருந்தால் போதும் என்று நினைத்து சந்தோஷப்பட்டு கொள்கிறார்.

ஆனால் மாறனின் செயல்களால் கொஞ்சம் கொஞ்சமாக வீராவின் மனசு மாறிக்கொண்டே வருகிறது. இருந்தாலும் பிடிவாத குணத்தால் மாறனை விட்டு பிரிய வேண்டும் என்று நினைக்கும் பொழுது வீராவின் தங்கை மூலம் மாறன் மீது எந்த தவறும் இல்லை, அண்ணன் இறந்ததற்கு மாறன் மாமா காரணம் இல்லை என்பது தெரிய வந்துவிடும். அதன் பிறகு மாறனை வீரா முழு மனதுடன் ஏற்றுக் கொள்வார்.

Trending News