திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கதீஜாவுக்கு கிடைக்க வேண்டிய மிகப்பெரிய பாலிவுட் வாய்ப்பு.. தட்டிப்பறித்த கண்மணி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் வெளியான காத்துவாக்குல 2 காதல் படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நயன்தாராவின் கண்மணி கதாபாத்திரத்தை விட சமந்தாவின் கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

தற்போது சமந்தா விஜய் தேவர்கொண்டா உடன் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்நிலையில் சமந்தாவுக்கு கிடைக்கவேண்டிய மிகப்பெரிய வாய்ப்பை தவறவிட்டு உள்ளார்.

அதாவது அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் பாலிவுட் படமான ஜவான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு சமந்தாவுக்கு முதலில் வந்துள்ளது. இதற்கு முன்னதாக அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் சமந்தா நடித்திருந்தார். இதனால் அட்லீ ஜவான் படத்திலும் சமந்தாவை நடிக்க வைக்க அவரை நாடியுள்ளார்.

அதாவது இந்தப் படம் தொடக்கமான 2019இல் சமந்தாவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது சமந்தா சில தனிப்பட்ட காரணத்தினால் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை மறுத்துள்ளார். பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சமந்தா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தால் அவரது மார்க்கெட் வேற லெவலில் போயிருக்கும்.

ஆனால் சமந்தா இந்த வாய்ப்பை மறுத்ததால் அட்லியின் பிகில் படத்தில் நடித்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் நயன்தாராவின் முதல் பாலிவுட் படமும் இதுதான். இப்படத்தில் ஷாருக்கான் அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடிக்கிறார்.

அதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் ஷாருக் கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என கூறப்படுகிறது. காத்துவாக்குல 2 காதல் படத்தில் கதீஜா கதாபாத்திரத்தில் ரசிகர்களை கவர்ந்தாலும் சமந்தா இந்த மிகப்பெரிய பாலிவுட் வாய்ப்பை இழந்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை அளிக்கிறது.

Trending News