சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ஜெயிலரை தும்சம் செய்ய வரும் கூலி.. லோகேஷ் ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கன்னட ஸ்டார்

Lokesh Kanagaraj : ரஜினி இப்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகின்ற அக்டோபர் மாதம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக ரஜினி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் படம் தான் கூலி.

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினி இணைந்துள்ள கூலி படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு இன்று வெளியிட இருக்கிறது. லோகேஷின் படம் என்றாலே மல்டி ஸ்டார் படமாக தான் இருக்கும். லியோ படத்தில் கூட சஞ்சய் தத், அர்ஜுன் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

ரஜினியின் நடிப்பில் கடைசியாக வெளியான ஜெயிலர் படத்திலும் மோகன்லால், ஜாக்கி ஷெரிப், சிவராஜ் குமார் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். அதேபோல் இப்போது கூலி படத்திலும் எக்கச்சக்க பிரபலங்கள் நடிக்கின்றனர்.

ரஜினியின் கூலி படத்தில் நடிக்கும் கன்னட நடிகர்

ஸ்ருதிஹாசன், சத்யராஜ், பகத் பாசில் போன்ற பிரபலங்களும் கூலி படத்தில் இணைந்திருக்கின்றனர். இந்நிலையில் கன்னடத்தில் மிகப்பெரிய நடிகரான உபேந்திரா கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் ஏற்கனவே தமிழில் விஷாலுடன் ஒரு படத்தில் நடித்திருந்தார். நடிகராக கலக்கி வந்த உபேந்திரா யூஐ என்ற படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இவருடைய சன் ஆஃப் சத்யமூர்த்தி என்ற படம் மிகப்பெரிய ஹிட்டானது.

மேலும் உபேந்திரா ரஜினியுடன் கூலி படத்தில் ஒரு பாடலுக்கும் நடனமாடி இருக்கிறாராம். ஜெயிலர் படத்தை தும்சம் செய்யும் அளவிற்கு லோகேஷ் ஸ்கெட்ச் போட்டு ஆட்களை தூக்கி இருக்கிறார். இன்றைய கூலி படத்தின் அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

சம்பவம் செய்ய போகும் லோகேஷ்

Trending News