சமீபத்தில் பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் 46 வயதில் மாரடைப்பால் இறந்த செய்தி அனைத்து நடிகர் நடிகைகளையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது இறுதி சடங்குக்கு தெலுங்கு சினிமா வட்டாரமே படையெடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழ் நடிகர்களில் பிரபுதேவா,அர்ஜுனனைத் தவிர வேறு யாரும் போகவில்லை என்பது ஒருபக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புனித் ராஜ்குமார் தமிழில் பெரிய அளவில் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். எப்போதுமே தன்னுடைய உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதில் ஆர்வமுடையவர். அதனால் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்து வந்தார்.
அதுவே அவரது இறப்பிற்கு காரணமாக அமைந்து விட்டது. இது ஒருபுறமிருக்க புனித் ராஜ்குமார் என் கடைசி ஆசை நிறைவேறவில்லை என பிரபல நடிகை ரம்யா கூறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவு ஏன் கடந்த முறை ஒரு கோவிலில் புனித் ராஜ்குமார் அடுத்த வருடம் இதே கோவிலுக்கு திரும்ப வருவேன் என பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென சாமி சிலை கீழே விழுந்தது இப்போது வைரலாகி வருகிறது.
புனித் ராஜ்குமாருக்கு இருந்த ஒரே ஆசை என்னவென்றால் அவரது அண்ணன் சிவராஜ் குமாரை வைத்து எப்படியாவது ஒரு படம் இயக்கி பார்த்துவிட வேண்டும் என்பதுதானாம். ஆனால் கடைசிவரை அந்த ஆசை நிறைவேறவில்லை என்பதுதான் சோகமான விஷயம். புனித் ராஜ்குமாருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது அவருடைய இறுதி சடங்கில் அனைவருக்கும் தெரிய வந்திருக்கும்.

படத்தில் நடிக்கிறோம் சம்பாதிக்கிறோம் என்று மட்டுமில்லாமல் சமூக விஷயங்களிலும் பொதுமக்கள் மீதும் அதிக அக்கறை கொண்ட நடிகராக வலம் வந்துள்ளார் புனித் ராஜ்குமார். ஏகப்பட்ட நலத்திட்ட உதவிகள் கல்வி உதவி என அவர் இறந்த பிறகு அவரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் வெளியே வந்து அவர் மீதான மரியாதையை இன்னும் கூடி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.