சினிமாவைப் பொறுத்தவரையில் மொழி ஒரு பிரச்னை கிடையாது என்பதற்கு பலபேர் உதாரணமாக இருக்கின்றனர். இவ்வளவு ஏன் தமிழ் சினிமாவில் நம்பர்ஒன் நடிகராக வலம் வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தே தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது.
இப்படி ஒரு மொழியை விட்டு இன்னொரு மொழியில் செட்டிலான பல நடிகர்கள் உள்ளனர். அவர்களில் ஒருவரைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அவர்தான் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன். இவர் பிறந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் தான்.
தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு உயர்ந்த இடத்தை பிடித்து விட வேண்டும் என போராடி கொண்டிருந்த ரவிச்சந்திரனுக்கு முதன் முதலில் ஒரு கன்னட சினிமா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது தென்னிந்திய சினிமா என்றாலே சென்னைதான்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிப் படங்களும் பெரும்பாலும் சென்னையில்தான் உருவாகி வந்தன. அப்படி கன்னட சினிமாவை சேர்ந்த இயக்குனர் ஒருவர் ரவிச்சந்திரனை அழைத்துச் சென்று கன்னட சினிமாவில் நடிக்க வைத்தார்.
இருந்தாலும் சொந்த மொழியில் சாதிக்க வேண்டும் என பெரிதும் ஆசைப்பட்டார். அதற்காக 1987 ஆம் ஆண்டு சொந்தமாகவே தமிழ் மற்றும் கன்னட மொழியில் ஒரே நேரத்தில் பருவராகம் என்ற படத்தை எடுத்தார்.
ஆனால் அந்தப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் மீண்டும் தமிழ் சினிமாவில் தன்னால் சாதிக்க முடியாது என்பதை உணர்ந்த ரவிச்சந்திரன் தற்போது வரை கன்னட சினிமாவில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.