வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

தல ரேஞ்சுக்கு பஞ்ச் டயலாக் அடிக்கும் கண்ணம்மா.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்!

விஜய் டிவியின் பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லியான வெண்பா, ஆறுமாதத்திற்கு தன் வீட்டிற்கு வரும் பாரதியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழலாம் என்று கனவு கோட்டை கட்டி இருந்த நிலையில், அந்தக் கோட்டை தரைமட்டம் ஆகுமாறு, வெண்பா பிளாக் அசோசியேட்டை சேர்ந்த உறுப்பினர்கள் இது வீடா அல்லது லாட்ஜா என்று பாரதி மற்றும் வெண்பாவை கிழி கிழி என்று கிழித்து, வெண்பா வீட்டிலிருந்து பாரதியை துரத்தி விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த வெண்பா வீட்டில் அழுது கொண்டிருந்தார் அப்பொழுது அங்கு வந்த கண்ணம்மா, பாரதி மற்றும் ஹேமா இருவரையும் வெண்பா வீட்டில் பச்சைத் தண்ணீர் கூட குடிக்க விடாமல் பக்கா பிளான் போட்டு மீண்டும் சௌந்தர்யாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்.

இந்நிலையில் ஆத்திரத்தில் அழுதுகொண்டிருந்தா வெண்பாவை பார்த்து கண்ணம்மா, ‘அடுத்தவன் புருஷனுக்கு ஆசைப்படும் நீ எல்லாம் வயிறு எரிந்து செத்து தொல, உன்னையெல்லாம் ஹேமா டாக்டரம்மா என்று எப்படி கூப்பிடுவாளா? அவள் என் கையால் சாப்பிட்டு வளர்ந்தவள்.

உனக்காகவே நான் என்னுடைய புருஷனை விட்டுக்கொடுக்காமல், என் மீது எந்தத் தவறும் இல்லை என்பதை நிரூபித்து அவருடன் கூடிய விரைவில் என்னுடைய இரண்டு பிள்ளைகளுடன் சேர்ந்து வாழப் போகிறேன். அதையெல்லாம் பார்த்து வயிறு எரிந்து சாகப் போகிறாய்’ என்று சோபாவில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு தல அஜித் ரேஞ்சுக்கு மாஸாக கெத்து காண்பித்து பஞ்ச் டயலாக் அடிக்கிறார்.

இதையெல்லாம் கண்ணம்மா செய்த பிளான் தான் என்று பாரதியும் புரிந்து கொள்கிறார். எனவே இனிவரும் நாட்களில் பாரதி வெண்பா வீட்டில் தங்கவே முடியாத என்ற அளவுக்கு கண்ணம்மா சரியான வேளையை பார்த்து விட்டார்.

அத்துடன் அடி வாங்கிய பாம்பு சும்மா இருக்காது என்பதுபோல வெண்பாவின் கனவை கலைத்த கண்ணம்மாவை பழி வாங்க இனி வரும் நாட்களில் வெண்பா தன்னுடைய சதித்திட்டத்தை தீட்டி செயல்படுத்த போகிறார்.

Trending News