சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

மறுபடியும் விஜய் டிவிக்கு வரும் கண்ணம்மா.. அடுத்த டைட்டில் வின்னர் இவங்க தான் போல

விஜய் டிவியின் டாப் சீரியல்கள் ஒன்றாக பாரதிகண்ணம்மா சீரியல் இருந்து விலகிய ரோஷினி அதன் பிறகு மீண்டும் தற்போது சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார். ஏனென்றால் விஜய் டிவியில் இரண்டு சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்து, மூன்றாவது சீசன் விரைவில் துவங்கப்படும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி, சமையல் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் நகைச்சுவையுடன் கலந்த சுவாரஸ்யம் மிகுந்த நிகழ்ச்சியாக இருப்பதால் ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளது.

அடுத்த சீசனில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலம் ரோஷினி களமிறங்க உள்ளதால், அவர்தான் குக் வித் கோமாளி சீசன்3ன் வெற்றியாளர் என்று இணையத்தில் ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால் மூன்றாவது சீசனை ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கும் ரசிகர்களுக்கு சமீபத்தில் இதுகுறித்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டி உள்ளது.

அத்துடன் இந்த சீசனில் சமையல் போட்டியாளராக யார் யார் களமிறங்க உள்ளனர் என்பது குறித்த லிஸ்ட் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது . அதில் நாட்டுப்புற இசைக் கலைஞர் அந்தோனிதாஸ், கருணாஸ் மனைவி கிரேஸ், இயக்குனரும் நடிகருமான மனோபாலா, சார்பட்டா பரம்பரை படத்தின் வில்லன் சந்தோஷ் பிரதாப், நடிகை வித்யூலேகா ஆகியோர் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளராக களமிறங்க உள்ளனர்.

இவர்களைத் தொடர்ந்து தற்போது பாரதிகண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து பிரபலமான ரோஷினி குக் வித் கோமாளி சீசன்3 இல் கலந்து கொள்ளவுள்ளார் இந்தத் தகவலை அறிந்த ரசிகர்கள் குஷி ஆகி உள்ளனர். அதேபோல் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான சிவாங்கி, பரத், மூக்குத்தி முருகன் ஆகியோரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, குரேஷி, மணிமேகலை, சுனிதா உள்ளிட்டோர் கோமாளிகளாக கலக்க உள்ளனர்.

ஏனென்றால் பாரதிகண்ணம்மா சீரியலில் ரோஷினியை பார்க்க முடியாமல் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்த சின்னத்திரை ரசிகர்களுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அந்த வாய்ப்பு கிடைக்கும் என எதிர்நோக்கி காத்துள்ளனர். ஏற்கனவே ரோஷினி பாரதிகண்ணம்மா சீரியலில் எக்கச்சக்கமான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தவர் என்பதால் ரம்யா பாண்டியன், தர்ஷா குப்தா போன்று இந்த சீசனில் ரோஷினி ஹைலைட்டாக பேசப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா வாய்ப்பை தேடி சின்னத்திரையில் இருந்து விலகிய ரோஷனுக்கு குக் வித் கோமாளி மூலம் ஏகப்பட்ட படவாய்ப்புகள் வரும் என்ற எதிர்பார்ப்பில் கலந்து கொள்ள உள்ளார். அத்துடன் சமையலில் அதிக ஆர்வம் கொண்ட ரோஷினி இந்த சீசனின் டைட்டில் வின்னர் ஆவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.

Trending News