வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

காளியாத்தாவாக மாறிய கண்ணம்மா.. மானத்தைக் சூறையாடும் அவலம்!

விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியலில் தீவிரவாதிகள் தங்களது 4 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளனர். அங்கு அப்பாவி மக்களுடன் பாரதி குடும்பமும் சிக்கியிருக்கிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஒருவர் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திடீரென்று உடல்நிலை குறைவு ஏற்பட்டு ஹார்ட் ஆபரேஷன் நடத்தப்பட்டது. இந்த ஹார்ட் ஆபரேஷன் சக்ஸஸ் ஆக நடந்தால் மட்டுமே தீவிரவாதிகளின் முதல் கோரிக்கையான செல்வத்தை விடுவிக்க முடியும் என அரசு தரப்பில் சொல்லப்பட்டது.

Also Read: தமிழில் தான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறேன்.. உண்மையைப் புட்டுப் புட்டு வைத்த மலையாள நடிகை

இதனால் ஹார்ட் ஆப்ஷனை பாரதி பல போராட்டங்களுக்கு இடையில் வெற்றிகரமாக செய்து முடித்தார். அதனால் 10 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு தீவிரவாதியான செல்வம் சிறையிலிருந்து, மருத்துவமனையில் இருக்கும் தீவிரவாதிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்நிலையில் தீவிரவாதிகளில் ஒருவர் அங்கிருக்கும் பெண்களை பாலியல் தொந்தரவு செய்கிறார். இதை அறிந்த கண்ணம்மா தன்னுடைய மானத்தை அடமானமாக வைத்து, அந்த தீவிரவாதி இருக்கும் இடத்திற்கு சென்றார்.

Also Read: மகாலட்சுமி, ரவீந்தரை தொடர்ந்த அடுத்த திருமண ஜோடி.. சஸ்பென்ஸ் ஆக திருமணத்தை முடித்த ராஜா ராணி 2 பிரபலம்

அங்கு கண்ணம்மாவையும் சீண்டிய அந்த தீவிரவாதியை கண்ணம்மா கையில் இருக்கும் கத்தியால் குத்திக் கிழித்து பத்ரகாளியாக மாறினார். காளியம்மாவாக மாறிய கண்ணம்மாவை பார்த்து மற்ற தீவிரவாதிகள் மிரண்டு போயினர்.

இப்படி பாரதிகண்ணம்மா சீரியலில் கதை என்ன என்பதை மறந்துவிட்டு பீஸ்ட் படத்தை அப்படியே காப்பி எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி கதை கிடைக்காமல் இஷ்டத்திற்கு சீரியலை உருட்டும் சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட்டை நெட்டிசன்கள் சோஷியல் மீடியாவில் கழுவி கழுவி ஊற்றியுள்ளனர்.

Also Read: டிஆர்பி-யில் தூள் கிளப்பும் சன் டிவி.. டாப் 5லிருந்து துரத்தப்பட்ட விஜய் டிவி சீரியல்கள்

Trending News