செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

சந்தேக புருஷனுக்காக உயிரை விட துணிந்த கண்ணம்மா.. சினிமாவை மிஞ்சும் சீரியஸான சீரியல் காட்சிகள்

விஜய் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடர் தற்போது விறுவிறுப்பான கதைகளத்துடன் சென்று கொண்டிருக்கிறது. மருத்துவமனையின் பின் கதவிலிருந்து போலீசார் உள்நுழைந்து உள்ளனர். இதை பார்த்த தீவிரவாதிகள் லட்சுமி மற்றும் ஹேமாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மேலும் போலீசார் தீவிரவாதிகளை நெருங்கும் போது இந்த குழந்தைகளை சுட தீவிரவாதிகளின் தலைவர் முடிவு செய்துள்ளார். ஆனால் துப்பாக்கியை கையில் வைத்திருக்கும் ஒரு தீவிரவாதி தனது அம்மா சொன்னதை நினைத்துப் பார்க்கிறார். உன் கூட பொறந்த பொறப்பா இருந்தா, நம்ம சொந்த பந்தமா இருந்தா இது மாதிரி செய்வியா என கேட்கிறார்.

Also Read :உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் மருமகள்.. உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

இதனால் தீவிரவாதியின் தலைவரை அவர்களுள் ஒருவரே சுட்டுக்கொன்று விடுகிறார். அதன் பின்பு போலீசார் மருத்துவமனையில் உள்ள எல்லோரையுமே வெளியில் அழைத்து வந்து விடுகிறார்கள். ஆனால் கண்ணம்மா பாரதியைத் தேடி செல்கிறார்.

அப்போது தான் தெரிகிறது பாரதியின் மேலே வெடிகுண்டு கட்டப்பட்டிருப்பது. இதனால் பாரதி கண்ணம்மாவை வெளியே போ என துரத்துகிறார். ஆனால் நான் செத்தாலும் உங்களோடு தான் சாவேன் என கண்ணம்மா உறுதியாக இருக்கிறார். அதன் பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் கண்ணம்மா பித்து பிடித்தது போல் சுத்துகிறார்.

Also Read :பக்கா ப்ளான் போட்டு கவுத்த மருமகள்.. பலிகிடாவான மாறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்

அந்த சமயத்தில் ஒரு மொபைல் போன் கண்ணம்மாவிடம் சிக்குகிறது. அதில் தனது அத்தை சௌந்தர்யாவுக்கு வீடியோகால் செய்து அருகில் உள்ள போலீசாரிடம் இந்த ஃபாம்பின் வயரை எப்படி கட் செய்வது என்று கேட்கிறார். அவர்கள் சொன்னதை கேட்டு பதட்டத்துடன் அந்த உயிரை கண்ணம்மா கட் செய்கிறார்.

மேலும் இதிலிருந்த கண்ணம்மா மற்றும் பாரதி தப்பிக்கிறார்கள். வேறொரு இடத்தில் அகிலனை அடித்துப் போட்டிருந்தார்கள். அவரையும் கண்ணம்மா காப்பாற்றி வெளியில் அழைத்து வருகிறார். இந்நிலையில் சந்தேக புருஷனாக இருந்தாலும் பாரதிக்காக உயிரை விட துணிந்தார் கண்ணம்மா. இதை நினைத்த பாரதி கண்ணம்மாவை ஏற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.

Also Read :க்ளைமாக்ஸை நோக்கி நகரும் பாரதிகண்ணம்மா.. ஒருவழியா முடிச்சிட்டீங்களா கோடி கும்பிடு

Trending News