வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

சொல் புத்தி தன் புத்தி இல்லாமல் திரியும் ஐஸ்வர்யா.. தவறுக்கு மேல் தவறு செய்யும் கண்ணன்

Pandian Stores Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தற்போது ஐஸ்வர்யா கண்ணன் பிரச்சனையை தொடர்ந்து முல்லைக்கும் புதிதாக பேராபத்து ஏற்பட இருக்கிறது. அதாவது ரொம்ப வருடமாக முல்லைக்கு குழந்தை இல்லாத நேரத்தில் தற்போது தான் கர்ப்பமாகி அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு விடிவு காலம் பிறந்தது.

அதனால் ரொம்பவே பத்திரமாத்து குழந்தை போல் கதிர் அழகாக பார்த்துக் கொண்டார். தற்போது முல்லையின் செக்கப்புக்காக காரில் வரும்போது இறங்கி ஜூஸ் குடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்கனவே கதிரிடம் ஹோட்டலில் பிரச்சனை செய்த நபர் இவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக பைக்கில் வேகமாக வந்து முல்லையை கீழே தள்ளி விடுகிறார்.

Also read: மட்டமான கதையை வைத்து உருட்டும் பாக்கியலட்சுமி.. பார்க்கவே கன்றாவியா இருக்கும் ராதிகாவின் செயல்

இதனால் அவர் கீழே விழுந்து வயிறு வலியால் துடித்து விடுகிறார். பிறகு இவரை அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். ரொம்பவே பதட்டத்துடனும் பயமும் வந்ததால் கதிர் ரொம்பவே துடிதுடித்து போகிறார். கண்டிப்பாக இங்கே ஒரு பெரிய செலவு ஏற்படும் நேரத்தில் ஏற்கனவே இருந்த பணத்தை அனைத்தையும் கண்ணனுக்காக கொடுத்த நிலையில் தற்போது பணம் இல்லாமல் திண்டாடும் நிலைமைக்கு ஆளாகிறார்கள்.

பிறகு இந்த விஷயம் கேள்விப்பட்ட மூர்த்தி, தனம் அனைவரும் மருத்துவமனையில் கதிருக்கு ஆறுதலாக இருக்கிறார்கள். அடுத்ததாக முல்லை குழந்தைக்கு ஏதாவது பிரச்சனை என்றால் கண்டிப்பாக இந்த மாதிரி தான் கதை நகரும். அதாவது அதே நேரத்தில் தனத்துக்கும் வயிறு வலி வந்து அவருக்கு பிறக்கும் குழந்தையை முல்லைக்கு மாற்றப்படும் விதமாக தான் இருக்கும்.

Also read: ராதிகாவின் மகளிடம் அன்பைப் பொழியும் பாக்கியா.. ஒவ்வொரு நாளும் டார்ச்சரை அனுபவிக்கும் கோபி

எத்தனை படங்களில் நம்ம பார்த்திருப்போம். எப்பொழுது ஒரே நேரத்தில் இரண்டு பேரும் கர்ப்பமானார்களோ அப்போவே இந்த மாதிரி ஒரு ட்விஸ்ட் வரும் என்று எதிர்பார்த்தோம். இதற்கு இடையில் ஐஸ்வர்யா வேற மாசமா இருக்கா இது எந்த மாதிரி ஆக போது தெரியலை. பிறகு தப்புக்கு மேல் தப்பு பண்ணும் கண்ணன் வீட்டில் உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறார்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால் ஐஸ்வர்யிடம் சொல் புத்தியும் இல்லை தன் புத்தியும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்க்கையை ஓட்டுவதால் இவர் மட்டும் இல்லாமல் இவரை சுற்றி இருக்கிறவங்களும் அவஸ்தைப்பட்டு வருகிறார்கள். பார்க்கலாம் வரப்போற எபிசோடுகளில் எந்த மாதிரியான முடிச்சுகள் வருகிறது என்று.

Also read: கதிரும் தனமும் திருந்தவே மாட்டாங்க போல.. கண்ணன் ஐஸ்வர்யா உருப்பட வாய்ப்பே இல்லை

Trending News